மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு சாப்பாடு ஊட்டிய பெண் காவலர், பாராட்டிய சூப்பர் ஸ்டார் – வீடியோ இதோ.

0
654
siranjeevi
- Advertisement -

தெலுங்கு சினிமா உலகில் மெகா ஸ்டார் ஆக கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் தெலுங்கு திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமைக்காக பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. 1977 ஆம் ஆண்டு தொடங்கி இவருடைய சினிமா பயணம் தற்போது வரை நிற்காமல் புகழின் உச்சத்தில் உள்ளது. இவருடைய மகன் ராம் சரணனும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளிவந்த சைரா நரசிம்ம ரெட்டி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா நடிப்பில் வெளிவந்த படம் தான் சைரா நரசிம்ம ரெட்டி. இந்நிலையில் நடிகை சிரஞ்சீவி அவர்கள் சுபஸ்ரீ என்கிற ஆந்திரப் பெண் போலீஸ்க்கு நேரடியாக வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு தன்னுடைய பாராட்டை தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ கால் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சுபஸ்ரீ என்கிற போலீஸ் ஆந்திராவை சேர்ந்தவர்.

- Advertisement -

இவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு உணவு அளித்து உள்ளார். அந்தப் பெண்ணால் உணவு உண்ண முடியவில்லை என்று தெரிந்தவுடன் சுபஸ்ரீ தன் கையால் ஊட்டி விட்டு உள்ளார். தற்போது இந்த செய்தியை சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்து பலரும் சுபஸ்ரீக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் ஒருபடி மேலாகச் சென்று சுபஸ்ரீக்கு நேரடியாக வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு தன்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது, உங்களுடைய அன்பான செயலால் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். உங்களுக்குள் ஒரு இரக்கமுள்ள தாயே கண்டேன் என்று கூறினார். இதற்கு சுபஸ்ரீ அவர்கள் கூறியிருப்பது, நான் என்னுடைய கடமையை மட்டும் செய்தேன். அந்தப் பெண் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தார். அதனால் அவரால் சாப்பிட முடியவில்லை. ஆகவே நான் உதவி செய்தேன் என்று கூறியிருந்தார். அது மட்டுமில்லாமல் சுபஸ்ரீ அவர்கள் சிரஞ்சீவியின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement