மறைந்த தன்னுடைய கணவருக்கு கிடைத்த விருதை வாங்கி நடிகை மேகனா பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து இருந்தவர் மேக்னா ராஜ். இவர் 2009ம் ஆண்டு வெளிவந்து இருந்த பெண்டு அப்பராவ் ஆர். எம். பி. என்ற படத்தின் மூலம் தான் மேக்னா சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து இருந்தார். பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியது.
இதனிடையே நடிகை மேக்னா ராஜ் அவர்கள் நீண்ட காலமாக கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து இருந்தார். பின் இவர்கள் இருவரும் 2018-ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்கள். திருமணத்துக்குப் பிறகும் நடிகை மேக்னா ராஜ் தொடர்ச்சியாக படங்களில் நடித்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டு இருந்தது.
சிரஞ்சீவி சர்ஜா மரணம்:
பின் இவரை ஜெயநகரில் உள்ள சாகர் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்கள். மேலும், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சர்ஜாவை காப்பாற்ற முடியவில்லை. அநியாயமாக நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்தார். இவருக்கு 39 வயது தான் ஆகி இருந்தது. அதேபோல் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா இதுவரை 22 படங்களில் நடித்து இருக்கிறார். இவர் கடைசியாக ‘ஷிவார்ஜுனா’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுனின் மருமகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேக்னா குழந்தை:
அதுமட்டும் இல்லாமல் அப்போது மேக்னா தன் முதல் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு இருந்தார். சிரஞ்சீவி சர்ஜா திடீர் மறைவு கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. பலரும் சிரஞ்சீவி சர்ஜாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து இருந்தார்கள். மேலும், சர்ஜா பிரிவில் சோகத்தில் இருந்த மேக்னாவிற்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதன் மூலம் இவர் வாழ்க்கையில் சந்தோசம் எட்டி பார்த்தது. மேலும், ஜூனியர் சிரஞ்சீவிக்கு ராயன் ராஜ் சர்ஜா என பெயரிட்டப்பட்டது.
மேக்னா குழந்தை:
தற்போது ரியாலிட்டி நிகழ்ச்சியில் மேக்னா ராஜ் நடுவராக பங்கேற்று வருகிறார். அதேபோல் இவர் எப்போதும் தன் குழந்தையுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படம், வீடியோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். மேகனா தன்னுடைய கணவர் இறப்பிலிருந்து மீண்டும் தன்னுடைய மகனுக்காக ஒரு புது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய கணவருக்கு கிடைத்த விருது குறித்து மேகனா போட்ட பதிவு சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் ஃபிலிம் ஃபேர் சவுத் 2022 விழா நடைபெற்றது. இதில் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு ஸ்பெஷல் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
மேக்னா பதிவு:
இந்த விருதை அவருடைய மனைவி மேகனா ராஜ் தான் வாங்கி இருந்தார். இது குறித்து மேகனா கூறியிருப்பது, சிரு, உங்களின் பிளாக் லேடி இறுதியாக வீட்டிற்கு வந்து விட்டாள். இதை எப்படி உணர்கிறேன் என்பதை வெளிப்படுத்த முடியாது. ஆனால், இதைப் பெற்றதும் நீங்கள் எப்படி ரியாக்ட் செய்திருப்பீர்கள் என்பது என் மனதில் இருக்கிறது. நான் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் பேபிம்மா. நீங்கள் யார் என்பதில் நேர்மையாக இருந்ததற்கு இது. மக்கள் உங்களை அதிகம் நேசித்திருக்கிறார்கள். அதனால் தான் நீங்கள் இதைப் பெற்றிருக்கிறீர்கள். இப்போதும் கூட நம்மை சுற்றி அற்புதங்கள் தொடர்ந்து நடக்கின்றது என்று கூறியிருக்கிறார்.