‘இது தான் அப்பா’ – கருவில் இருந்த போதே இறந்த தன் தந்தையை மகனுக்கு காட்டிய மேக்னா. மனதை உருக்கும் வீடியோ.

0
1929
meghna
- Advertisement -

மறைந்த நடிகர் சிரஞ்சீவிவின் நினைவிடத்தில் அவரின் மகன் மற்றும் மனைவி அஞ்சலி செலுத்திய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து இருந்தவர் மேக்னா ராஜ். இவர் 2009ம் ஆண்டு வெளிவந்து இருந்த பெண்டு அப்பராவ் ஆர். எம். பி என்ற படத்தின் மூலம் தான் மேக்னா சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து இருந்தார். பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியது.

-விளம்பரம்-

இதனிடையே நடிகை மேக்னா ராஜ் அவர்கள் நீண்ட காலமாக கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து இருந்தார். பின் இவர்கள் இருவரும் 2018-ம் ஆண்டு மே 2-ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்கள். திருமணத்துக்குப் பிறகும் நடிகை மேக்னா ராஜ் தொடர்ச்சியாக படங்களில் நடித்து இருந்தார். இதுவரை நடிகர் சிரஞ்சீவி சர்ஜா 22 படங்களில் நடித்து இருக்கிறார். இவர் கடைசியாக ‘ஷிவார்ஜுனா’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

39 வயதில் இறந்த சிரஞ்சீவி :

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி சிரஞ்சீவி சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. பின் உடனடியாக இவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த போது அவருக்கு 39 வயது தான் ஆகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தையை கூட பார்க்காமல் இறந்த கொடுமை :

இவர் இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக ‘ஷிவார்ஜுனா’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.அதுமட்டும் இல்லாமல் அப்போது மேக்னா தன் முதல் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு இருந்தார். தன் முதல் குழந்தையை பார்ப்பதற்குள் சிரஞ்சீவி சர்ஜா உயிரிழந்து விட்டார். சர்ஜாவின் திடீர் மறைவு கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

-விளம்பரம்-

இதையும் பாருங்க : அவரை திருமணம் செய்தால் என் பெயரை கூட மாத்த வேணாம் – நித்தியை திருமணம் செய்ய ஆசைப்படும் Sk பட நடிகை.

ஜூனியர் சிரஞ்சீவி :

கணவர் இறந்த சில மாதத்தில் மேக்னாவிற்கு வளைகாப்பு நடைபெற்றது. அதில் சிரஞ்சீவின் புகைப்படம் முன் அவரது வளைகாப்பு நடைபெற்றது. மேலும், சர்ஜா பிரிவில் சோகத்தில் இருந்த மேக்னாவிற்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதன் மூலம் இவர் வாழ்க்கையில் சந்தோசம் எட்டி பார்த்தது. மேலும், ஜூனியர் சிரஞ்சீவிக்கு ராயன் ராஜ் சர்ஜா என பெயரிட்டப்பட்டது. தற்போது ரியாலிட்டி நிகழ்ச்சியில் மேக்னாராஜ் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இரண்டாம் ஆண்டு நினைவு நாள் :

இப்படி ஒரு நிலையில் சிரஞ்சீவியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சமீபத்தில் வந்து இருந்தது. இதையொட்டி சிரஞ்சீவி மற்றும் மேக்னா குடும்பத்தினர் அவரின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது தன் குழந்தைக்கு இவர் தான் அப்பா என்று அவரது புகைப்படத்தை காட்டி கண் கலங்கினார் மேக்னா. இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலரும் கண்ணீர் வடித்து மேக்னாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement