அவரை திருமணம் செய்தால் என் பெயரை கூட மாத்த வேணாம் – நித்தியை திருமணம் செய்ய ஆசைப்படும் Sk பட நடிகை.

0
780
nithyananda
- Advertisement -

நித்தியானந்தாவை திருமணம் செய்து கொள்ள ஆசை என்று பிரபல நடிகை அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் பிரியா ஆனந்த். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ஜெய் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வாமனன்” என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், பிரியா ஆனந்த் அவர்கள் முன்னணி நடிகையாக வரவில்லை என்றாலும் தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார். கடைசியாக இவர் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த எல் கே ஜி என்ற படத்தில் பிரியா ஆனந்த் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் துருவ் விக்ரம் அறிமுகமான ஆதித்ய வர்மா படத்திலும் நடித்து இருந்தார். பின் இவர் மாயா என்ற வெப் தொடரில் நடித்து இருந்தார். தற்போது இவர் அந்தகன், சுமோ, காசேதான் கடவுளடா போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : என் அப்பா ப்ரோடுயுசர், என்ன தம்பி பெரிய நடிகர்னா நான் என்னடா பண்ண முடியும் – கடுப்பாகி பேசிய ஜித்தன் ரமேஷ்.

நடிகை பிரியா ஆனந்த் அளித்த பேட்டி:

இந்த நிலையில் நடிகை பிரியா ஆனந்த் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் நித்யானந்தா குறித்து கூறியிருந்தது, நித்யானந்தா மீது எனக்கு கிரஸ். அவரை திருமணம் செய்ய கூட ஆசைப்படுகிறேன். நித்தியானந்தாவை திருமணம் செய்தால் என்னுடைய பெயரான பிரியா ஆனந்த் என்பதை கூட மாற்றம் அவசியம் இல்லை என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் அளித்து இருந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-

நித்தியானந்தா குறித்த சர்ச்சை:

இது குறித்து பலரும் பலவிதமான கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். போலி சாமியார் நித்தியானந்தா பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு சினிமா பிரபலங்களை விட சோசியல் மீடியாவில் சர்ச்சைகளில் சிக்கிய நாயகன். இவருக்கு இந்திய நாட்டில் சிக்கிய இல்லாமல் உலகில் பல நாடுகளில் இவருக்கு ஆசிரமங்கள் இருக்கின்றது. உலக அளவில் இவருக்கு பக்தர்கள் இருக்கின்றார்கள். இருந்தாலும் நித்தியானந்தா மீதும் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் பல புகார்கள் எழுந்து இருக்கின்றது.

நித்தியானந்தா மீது உள்ள வழக்கு:

அதிலும், குழந்தைகள் கடத்தல், பாலியல் துஸ்பிரயோகம், ஆசிரமத்திற்கு நன்கொடை வசூல் செய்ய வந்த குழந்தைகளை பாலியல் கொடுமைப் படுத்துதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் அவர் மீது போன்ற இருக்கிறது. மத்திய அரசு நித்யானந்தாவை தீவிரமாக தேடியும் வருகிறது. இவர் ஒரு குற்றவாளி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதனால் இவர் தலைமறைவாக உள்ளார்.

நித்தியானந்தாவை தேடி வரும் போலீஸ்:

அதோடு இவர் கைலாசம் என்ற கற்பனை நாட்டில் தான் இருப்பதாக அடிக்கடி கூறிக் கொண்டிருக்கிறார். எந்த நேரத்திலும் அவர் போலீசில் சிக்க வாய்ப்பு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் நடிகை பிரியா ஆனந்த் அளித்து இருக்கும் பேட்டி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதோடு நித்தியானந்தா ஏற்கனவே பல நடிகைகளுடன் தொடர்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement