சிரஞ்சீவி சார்ஜா குடும்பத்தை சுற்றும் சோகம் – இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.

0
2638
chiranjeevi
- Advertisement -

சமீப காலமாகவே இந்திய திரையுலகை சேர்ந்த நடிகர்கள் பலர் அநியாயமாக உயிரிழந்து வருகின்றனர். ரிஷி கபூர், இர்பான் கான், சுஷாந்த் சிங் போன்ற பிரபல நடிகர்கள் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சிரஞ்சீவி சார்ஜுன் உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த மேக்னா ராஜ்ஜின் கணவரும், நடிகர் அர்ஜுனின் மருமகனும் தான் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா.

-விளம்பரம்-

நடிகை மேக்னா ராஜ் மற்றும் கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜா இருவரும் 2018-ம் ஆண்டு மே 2-ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்கள். ஜூன் 6 ஆம் தேதி சிரஞ்சீவி சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.பின் உடனடியாக இவரை ஜெயநகரில் உள்ள சாகர் மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

- Advertisement -

ஆனால், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் சிரஞ்சீவியின் முதல் மாத இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் நடிகர் சிரஞ்சீவி சார்ஜவாவின் சகோதரரும் நடிகருமான துருவா சார்ஜாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதித்துள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள துருவா சார்ஜா, எனக்கும் என் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய அறிகுறிகள் உள்ளது. விரைவில் நாங்கள் மீண்டு வருவோம். எங்கள் உடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தீர்களோ, அவர்களெல்லாம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement