கார்கி போல ஒரு படம் – எப்படி இருக்கிறது சித்தார்த்தின் ‘சித்தா’ – முழு விமர்சனம் இதோ

0
1560
Chittha
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சித்தார்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. சமீப காலமாகவே சித்தார்த் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சித்தா. இந்த படத்தை ETAKI ENTERTAINMENT நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பல நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் எழுதி இயக்கி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் சித்தார்த் தன் அண்ணன், அண்ணி, அண்ணன் மகளுடன் சந்தோஷமாக எளிமையான அழகான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். திடீரென்று ஒரு நாள் சித்தார்த்தின் அண்ணன் இறந்து விடுகிறார். என்ன செய்வது என்று புரியாமல் சித்தார்த் பரிதவித்து நிற்கிறார். பின் தன்னுடைய அம்மாவை விட சித்தப்பாவான சித்தார்த் மீது தான் அதிக பாசம் வைக்கிறார் அண்ணன் மகள். அதுமட்டுமில்லாமல் சித்தார்த்தை அவர் சித்தா என்று பாசமாக அழைக்கிறார்.

- Advertisement -

இதனால் சித்தார்த்திற்கும் தன்னுடைய அண்ணன் மகள் மீது அதிக பாசம் ஏற்படுகிறது. இதற்கிடையில் சித்தார்த் நிமிஷாவை காதலிக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஒருநாள் திடீரென்று குழந்தை காணாமல் போகிறது. ஏன் அந்த குழந்தை காணாமல் போனது? சித்தார்த் குழந்தையை கண்டுபிடித்தார்களா? சித்தார்த் அண்ணனின் இறப்பிற்கு காரணம்? என்பதே படத்தின் மீதி கதை.

இதுவரை ரொமாண்டிக் பாயாக வந்த சித்தார்த் இந்த படத்தில் இதுவரை யாரும் பார்த்திராத கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். இதுவரை காணாத சித்தார்த்தை இந்த படத்தில் பார்க்கலாம். சித்தப்பா- மகள் இடையே இருக்கும் அழகான உறவை சித்தார்த் தன்னுடைய நடிப்பின் மூலம் சிறப்பாக காண்பித்து இருக்கிறார். இவரை அடுத்து படத்தில் அண்ணியாக வரும் அஞ்சலி நாயர், மகளாக வரும் சஹஷ்ரா ஸ்ரீ தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

குறிப்பாக, சிறுமி சஹஷ்ரா ஸ்ரீ நடிப்பு பாராட்டை பெற்றிருக்கிறது. மேலும், சித்தார்த்திற்க்கு ஜோடியாக நிமிஷா வருகிறார். இவர் மலையாள நடிகை. இது தான் இவருக்கு முதல் படம் இருந்தாலும் இந்த முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் ஸ்கோர் செய்திருக்கிறார். இப்படி படத்தில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களது கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்து இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

இயக்குனரும் கதைக்களத்தை சிறப்பாக சென்றிருக்கிறார். காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்திலும் இயக்குனர் பட்டையை கிளப்பி இருக்கிறார். படத்தில் சிறுவர்கள் பெற்றோர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்ற மெசேஜை இயக்குனர் அழகாக காண்பித்து இருக்கிறார். மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சித்தார்த்தின் சித்தா படம் சுமாராக இருக்கிறது.

நிறை:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

சித்தப்பா-மகள் இடையே ஆன பாச கதை

சிறுவர்கள் பெரியவர்களிடம் நடந்து கொள்ளும் விதம்

குழந்தைகள் வளர்க்கும் முறையை இயக்குனர் அழகாக காண்பித்திருக்கிறார்

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் தான்

முதல் ஆரம்பம் கதை பொறுமையாக செல்கிறது

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக குறைகள் எதுவும் இல்லை

மொத்தத்தில் சித்தா- நல்ல முயற்சி

Advertisement