20 வருஷமா போராடிட்டு இருந்தேன் – மேடையில் சித்தார்த் காலில் விழுந்தா சித்தா பட வில்லன்.

0
827
- Advertisement -

சித்தா பட வில்லன் மேடையில் நடிகர் சித்தார்த் காலில் விழுந்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை, எழுத்தாளர் என பன்முகம்கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. அதோடு சமீப காலமாக இவர் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சித்தா. இந்த படத்தை ETAKI ENTERTAINMENT நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பல நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

சித்தா படம்:

இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் எழுதி இயக்கி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை பற்றி இந்த படம் பேசியிருக்கிறது. இந்த படம் 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால், படம் வெளியாகி ஐந்து நாட்களிலேயே 13 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் இந்த படத்தை ரிலீஸ் செய்து இருக்கிறார்கள்.

சித்தா படம் குறித்த சர்ச்சை:

அந்த வகையில் இந்த படத்தை கன்னடத்தில் சிக்கும் என்ற பெயரில் வெளியாகி இருந்தது. இதனால் இந்த படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் சித்தார்த் அவர்கள் கர்நாடகாவிற்கு சென்று இருந்தார். அப்போது அங்கு கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பினர் பிரஸ்மீட்டிற்குள் நுழைந்து சித்தார்த்தை மிரட்டி இருக்கின்றனர். இருந்தாலும் முதலில் சித்தார்த் கண்டுகொள்ளாமல் அமைதியாக பேசிக் கொண்டிருந்தார். பின் கோபமடைந்த கன்னட அமைப்பினர் மேடைக்கு முன் நின்று கோஷமிட்டு சித்தார்த்தை மிரட்டி இருக்கின்றனர். இதனால் சித்தார்த் அங்கிருந்து வெளியேறி இருந்தார்.

-விளம்பரம்-

படத்தில் ரமேஷ் தர்ஷன்:

இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் சர்ச்சையாகி இருந்தது. இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். மேலும், இந்த ஆண்டில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாக சித்தா இருக்கிறது. அதேபோல் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் ரமேஷ் தர்ஷன். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டிருந்தது. இந்நிலையில் ரமேஷ் தர்ஷன் குறித்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

ரமேஷ் தர்ஷன் குறித்த வீடியோ:

அதாவது, இந்த படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்து இருந்தார்கள். அப்போது படத்தின் வில்லன் ரமேஷ் தர்ஷன், நான் இருபது ஆண்டுகளாக சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு இந்த படம் தான் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்திருக்கிறது என்று எமோஷனலாக பேசி இயக்குனர் மற்றும் நடிகர் சித்தார்த்தின் காலில் விழுந்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement