ஆரம்பித்த சில வாரங்களிலேயே trp யில் வந்த சித்தி 2. எந்த இடம் தெரியுமா?

0
2385
Chithi-2

ராதிகா அவர்கள் 80களில் இருந்து தொடங்கி இன்று வரை இடைவிடாமல் வெள்ளித்திரை, சின்னத்திரை என மாறி மாறி நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமா திரை உலகில் 80, 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா. இவர் பிரபல சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக சித்தி, அண்ணாமலை, வாணி ராணி,செல்வி, அரசி என பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தார். ஆனால், ராதிகாவிற்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி தந்தது சித்தி சீரியல் தான். 1999ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை இல்லத்தரசிகள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டு பார்க்க வைத்த சீரியல் சித்தி.

- Advertisement -

கண்ணின் மணி கண்ணின்மணி என தொடங்கும் பாடலும் அனைத்து இல்லத்தரசியின் வீட்டையும் ஆக்கிரமித்து உள்ளது. இந்த சீரியலிலை ராதிகா சரத்குமார் அவர்களே தயாரித்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் முதல் முறையாக பட்டி தொட்டி எல்லாம் வெற்றி அடைந்த சீரியலும் இது தான். இன்னும் சொல்லப்போனால் சித்தி சீரியலுக்கு பிறகு தான் ராதிகா அவர்கள் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமானர். வெள்ளித்திரையில் சாதித்தவர்களால் சின்னத்திரையிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் நடிகை ராதிகா சரத்குமார்.

தற்போது 22 வருடங்களுக்கு பிறகு “சித்தி 2” சீரியல் சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க் கொண்டு உள்ளது. இந்த சித்தி 2 சீரியலை கே.விஜயன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் ராதிகா, பொன்வண்ணன், ரூபினி, நிஷாந்தி (பானுப்பிரியாவின் தங்கை), டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த நிலையில் ராதிகாவின் இந்த சித்தி 2 சீரியல் தொடங்கி முதல் வாரத்திலேயே டிஆர்பியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து உள்ளது.

-விளம்பரம்-
Image result for chithi 2

இன்னும் சில வாரங்களில் கண்டிப்பாக இந்த சித்தி 2 சீரியல் முதல் இடத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சீரியல் தொடங்கி சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும், டிஆர்பியில் முதல் இடத்தில் நாயகி, இரண்டாம் இடத்தில் ரோஜா, மூன்றாம் இடத்தில் கண்மணி, நான்காம் இடத்தில் கல்யாண வீடு சீரியல் பெற்று உள்ளது.

Advertisement