கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.
ஆனால், சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமானதால் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்கள் அனைத்தும் OTTயில் வருகிறது.இப்படி ஒரு நிலையில் சீரியல் படப்பிடிப்புகள் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக பல்வேறு தொடர்கள் நிறத்துப்பட்டுள்ளது.
அதே போல கொரோனா பிரச்சனை காரணமாக வேறு மாநிலத்தில் இருக்கு நடிகர்கள் படப்பிடிப்புகளுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்துள்ளனர். இதுகுறித்து ராதிகா சரத் குமார் தெரிவித்துள்ளதாவது,
“சித்தி 2 தொடர்கிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நடிகர்களுக்கு பதிலாக வேறு சில நடிகர்களை நடிக்க வைக்கிறோம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். பாதுகாப்பே முக்கியம். விரைவில் சித்தி 2 சன் டிவியில் ஒளிபரப்பாகும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த தொடரில் நிழல்கள் ரவி புதிதாக இணைந்துள்ளார்.