எங்ககிட்ட இத மட்டும் சொல்லி இருந்தா நாங்களும் அவர் கூட சேர்ந்து போராடி இருப்போம்ல – சித்ராவின் அம்மா கண்ணீர் பேட்டி

0
1111
- Advertisement -

ஹேம்நாத் அளித்த பேட்டி தொடர்பாக சித்ரா அம்மா அளித்து இருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவை யாராலும் மறக்க முடியாது. தான் வாழ்ந்த கடைசி நாட்களில் முல்லை என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சித்ரா. இவருடைய மரணம் இன்றும் யாராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதை பாதித்த ஒன்று. இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடும் உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
Vj Chitra Suicide Case Jayakumar Explanation| சித்ரா மரணம்

விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்த இவர் அதே சேனலில் பிரபலமான சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த சித்ரா தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சித்ரா அவர்கள் சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே பெங்களூரு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் ஹோட்டலில் தனது கணவர் ஹேமநாத்துடன் தங்கியிருந்தார். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.

- Advertisement -

சித்ராவின் மரணம்:

இவர் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் அவர் கணவர் ஹேமநாத் தான் என்று சித்ராவின் பெற்றோர்கள் புகார் அளித்து இருந்ததால் ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து விசாரித்து இருந்தது. அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சில மாதங்களுக்கு முன் தான் சித்ரா உடைய முதலாம் ஆண்டு நினைவு தினம் வந்து இருந்தது. இவர் இறந்து ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. ஆனால், இவருடைய திடீர் மரணத்திற்கு காரணம் என்ன? தற்கொலையா? கொலையா? அதற்கு காரணமானவர்கள் யார்? சித்ராவிற்கு நீதி கிடைத்ததா? என்று இன்னும் விடை தெரியாமல் இருக்கின்றது.

Vj Chitra Father In Law Releases CCTV Proofs About Chitra

சித்ரா மரணம் குறித்து ஹேம்நாத் அளித்த பேட்டி:

இப்படி ஒரு சூழ்நிலையில் சித்ரா மரணத்திற்கு அரசியல்வாதிகள் தான் காரணம். என் உயிர்க்கும் ஆபத்து இருக்குது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்று ஹேமநாத் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். இப்படி இவர் கூறியதை அடுத்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் கிளம்பி இருக்கிறது. இந்நிலையில் சித்ராவின் அம்மாவிடம் இது தொடர்பாக பேட்டி கொடுத்து இருந்தார். அதில் அவர், அரசியல்வாதியின் மகன் தான் சித்ராவின் மரணத்திற்கு காரணம் என்று ஹேம்நாத் அளித்திருந்த பேட்டி நம்ப முடியாத வகையில் இருக்கிறது. இதை இவர் அப்போதே சொல்லியிருந்தால் உண்மை வெளியே வந்திருக்கும். இப்போது தப்பிப்பதற்காக தான் இந்த மாதிரி தேவையில்லாமல் ஹேம்நாத் செய்கிறார்.

-விளம்பரம்-

சித்ரா அம்மா ஹேம்நாத் குறித்து கூறியது:

அதோடு அப்பவே, எந்த நான் தவறும் செய்யவில்லை என்று எங்களிடம் சொல்லியிருந்தால் நானும், அவர் குடும்பமும் சேர்ந்து சேர்ந்து சித்ராவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வாங்கித் தந்து இருப்போம். ஆனால், அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப்போது அரசியல்வாதிகள் தான் காரணம் என்று கூறுவது கேஸை திசை திருப்பும் நோக்கில் இருக்கிறது. இன்னும் சித்ராவின் மரணத்தில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட இரண்டாவது பிறந்தநாள் முடிந்து விட்டது. ஆனால், அவளுக்கான நியாயமும் நீதியும் கிடைக்கவில்லை. மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. இந்த ஹேமநாத் பல இடங்களில் கோடி கணக்கில் கடன் வாங்கி அதில் சித்ராவின் பெயரையும் இழுத்து விட்டு இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குறித்து கூறியது:

இது தொடர்பாக நாங்களும் கண்டித்து இருக்கிறோம். அப்போதெல்லாம் அவள் என் தேவதை நான் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகளை கூறி நம்பிய வைத்தான். நாங்களும் நம்பி என் மகளை ஒப்படைத்தோம்.அரசியல்வாதிகள் மிரட்டல் விடுகிறார்கள் என்றால் நீ தப்பு இருப்பதாய் அதனால் தான் அவர்கள் மிரட்டல் விடுகிறார்கள். அவன் தவறு செய்யவில்லை என்றால் உண்மை சொல்ல வேண்டும் அல்லவே? அதேபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதை எழுதும் பிரியா தம்பியிடம் சித்ராவிற்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது. ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் எடுக்காதீர்கள் என்று சொன்னவுடன் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று போனை கட் செய்து விட்டார். அவரும் பெண்பிள்ளை வைத்திருக்கிறார். எங்களுடைய பாவம் நிஜமாகவே சும்மா விடாது. அந்த அளவிற்கு என் மனது வெந்து நொந்து போய் இருக்கிறது என்று கண்ணீர் உடன் கூறி இருந்தார்.

Advertisement