நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு அளித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவை யாராலும் மறக்க முடியாது. தான் வாழ்ந்த கடைசி நாட்களில் முல்லை என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சித்ரா. இவருடைய மரணம் இன்றும் யாராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை மனதை பாதித்த ஒன்று.
இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடும் உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த சித்ரா தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சித்ரா சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே பெங்களூரு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் ஹோட்டலில் தனது கணவர் ஹேமநாத்துடன் தங்கியிருந்தார்.
சித்ரா தற்கொலை:
அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு இருந்தார். இவர் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் அவர் கணவர் ஹேமநாத் தான் என்று சித்ராவின் பெற்றோர்கள் புகார் அளித்து இருந்தார்கள். அதன் பெயரில் ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து இருந்தது. அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சித்ரா இறந்தும் ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. ஆனால், இவருடைய திடீர் மரணத்திற்கு காரணம் என்ன? தற்கொலையா? கொலையா? என்று இன்னும் விடை தெரியாமல் இருக்கின்றது.
ஹேம்நாத் அளித்த பேட்டி:
இப்படி ஒரு சூழ்நிலையில் சித்ரா மரணத்திற்கு அரசியல்வாதிகள் தான் காரணம். என் உயிர்க்கும் ஆபத்து இருக்குது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்று ஹேமநாத் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். இப்படி இவர் கூறியதை அடுத்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் கிளம்பி இருந்தது. இதனை அடுத்து சித்ராவின் அம்மா, ஹேம்நாத் கேஸை திசை திருப்பும் நோக்கில் இருக்கிறது என்று கூறி இருந்தார். மேலும், சித்ரா தற்கொலை சம்மந்தமாக வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. போலீஸ் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
ஹேம்நாத் ஜாமின் ரத்து செய்யக்கோரி மனு:
இந்த நிலையில் ஹேம்நாத் ஜாமினை ரத்து செய்யக்கோரி அவருடைய நண்பர் சையத் ரோஹித் என்பவர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில் அவர், ஹேம்நாத் என்னுடைய நீண்டகால நண்பர். அவர் மூலம் தான் எனக்கு சித்ராவை நன்றாக தெரியும். சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து காவல்துறை விசாரிக்கும்போது சாட்சியம் அளித்து இருக்கிறேன். ஆனால், ஹேமநாத்தின் மற்ற நண்பர்கள் சாட்சியமளிக்க மறுத்திருக்கிறார்கள். ஆனால், நான் மட்டுமே சாட்சி அளித்திருக்கிறேன். இதற்காக ஹேம்நாத் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்.
மனுவில் கூறி இருப்பது:
என்னுடைய குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஹேம்நாத்தின் பணம் மற்றும் அடியாட்களின் பலத்துடன் சாட்சிகளை மிரட்டி வருகிறார். அவரை வெளியே சுதந்திரமாக நடமாட விட்டால் சாட்சிகளைக் கலைப்பார். உயர்நீதிமன்றம் ஜாமீன் நிபந்தனையை மீறி ஹேம்நாத் செயல்பட்டு வருவதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹேம்நாத், சித்ராவின் பெற்றோர் மற்றும் காவல்துறை பதிலளிக்க விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளது.