என் உடம்புல மத்த எடத்துல கூட முடி வளருது அதையும் ஆராய்ச்சி பண்ண சொல்லுங்க – சமந்தாவிற்கு பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.

0
1148
- Advertisement -

தனது உருவத்தை மறைமுகமாக கேலி செய்த சமந்தாவிற்கு மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் சிட்டி பாபு. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இந்தியாவின் பல மொழி படங்களில் நடிகை சம்ந்தா நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் இவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா அந்த “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.

-விளம்பரம்-

பின் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து இருந்தார். அதேபோல் சமீப காலமாக தெலுங்கு சினிமாவில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தாவிற்கு இடையில் Myositis என்னும் Autoimmune என்ற நோய் தாக்கி சிகிக்சை பெற்று இருந்தார். இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இருந்தாலும், இவர் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் யசோதா.

- Advertisement -

படம் குறித்த விமர்சனம்:

இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் சமந்தா கேரியர் முடிந்து விட்டது என்று பிரபல இயக்குனர் அளித்து இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும், இயக்குனருமான சிட்டிபாபு அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

இயக்குனர் சிட்டிபாபு அளித்த பேட்டி:

அதில் அவர், சமந்தா குறித்து கூறியிருந்தது, சமந்தா ஸ்டார் ஹீரோயினியாக அவருடைய கேரியர் ஏற்கனவே முடிந்து விட்டது. தற்போது அவர் தன்னுடைய படங்களை பிரபலப்படுத்த கீழ்த்தரமான தந்திரங்களை எல்லாம் பயன்படுத்துகிறார். சமந்தா விவாகரத்துக்கு பிறகு புஷ்பா படத்தில் நடனம் ஆடினார். தன்னுடைய வாழ்க்கைக்காக அவர் இப்படி நடனம் ஆடுவதா? ஸ்டார் ஹீரோயினி என்ற ஸ்டேட்டஸை அவர் இழந்துவிட்டார்.

-விளம்பரம்-

சமந்தா குறித்து சொன்னது:

தற்போது அவருக்கு வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்று வருகிறார். வாழ்க்கை முடிந்து விட்டது. இழந்த புகழை அவர் மீண்டும் பெற முடியாது. அவர் திரையுலகை தொடர வேண்டும் என்றால் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்று நடிக்க தான் வேண்டும். யசோதா படத்திற்கு அவர் கண்ணீர் சிந்தி படத்தை வெற்றி பெற செய்ய முயற்சித்தார். தற்போது சாகுந்தலம் படத்தின் போதும் இதனையே செய்து அனுதாபம் தேடுகிறார்.

சமந்தா பதிலடி :

எப்பொழுதும் சென்டிமென்ட் கை கொடுக்காது. படத்தில் அவரது கதாபாத்திரம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று கூறியிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவரின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை சமந்தா, இவரது காதுகளில் இருக்கும் முடியை கேலி செய்யும் விதமாக கூகுளில் ‘ காதுகளில் எப்படி முடி முளைக்கிறது’ என்று தேடி அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் சமந்தாவிற்கு பதிலடி கொடுத்து இருக்கும் சிட்டி பாபு என் பெயரை சமந்தா தன் பதிவில் குறிப்பிடவில்லை.

டீனேஜ் பெண் அல்ல :

சமந்தா என் காதுகளில் வளரும் முடியை மட்டும் பார்த்து உள்ளார். அதனால் அதைப்பற்றி கூறியுள்ளார். என் காதில் உள்ள முடியைப் பற்றி பேசாமல், நான் சொன்ன வார்த்தைகளுக்கு பதில் அளித்திருக்கலாம். என் உடலில் இன்னும் வேறு இடங்களிலும் முடி வளர்ந்து இருக்கிறது. வேண்டுமானால் அதையும் அவர் ஆராய்ச்சி செய்து கொள்ளலாம். சமந்தா இன்னும் 18 20 வயது டீனேஜ் பெண் அல்ல.

அவருக்கும் பாதி பங்கு இருக்கிறது :

அவர் சகுந்தலை கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தவில்லை அவருக்கு வயதாகி விட்டது அதனால் துணை நடிகை கதாபாத்திரங்களில் அவர் நடிக்கலாம் என்றுதான் நான் சொன்னேன் இதில் என்ன தவறு இருக்கிறது அதற்கு எனக்கு அவர் நேரடியாகவே பதில் அளித்து இருக்கலாமே அவரது பதில் சற்றே அநாகரீகம் என்றாலும் இதை துவக்கி வைத்தது சமந்தா தான் அதனால் இந்த சர்ச்சையில் அவருக்கும் பாதி பங்கு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்

Advertisement