தமிழ் சினிமா திரையுலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சியான் விக்ரம். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் நடிகர் விக்ரம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கேஜிஎஃப் இல் இருந்த பூர்வ குடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருந்தது.

இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதை அடுத்து கடைசியாக விக்ரம் அவர்கள் ‘வீர தீர சூரன்- பார்ட் 2’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இதை அடுத்து விக்ரம் நடிக்கும் படம் தொடர்பாக எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. அதோடு கடந்த ஆண்டு மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வந்தது.
விக்ரம் 63 படம்:
அது விக்ரம் உடைய 63 படமாக உருவாகும் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டார்கள். ஆனால், அந்த படத்தினுடைய எழுத்து வேலைகளில் மடோன் அஸ்வின் மும்முறமாக செயல்பட்டு வருவதால் அந்த படம் உருவாக கொஞ்சம் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார் என்று அறிவிப்பும் வந்தது. ஆனால், அந்த அறிவிப்புக்கு பிறகு அந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவுமே வெளியாகவில்லை.

விக்ரம் பட பதிவு:
இப்படி இருக்கும் நிலையில் விக்ரமுடைய 63 வது படத்தை அறிமுக இயக்குனர் இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. போடி கே ராஜ்குமார் என்ற புதுமுகம் இயக்குனர் தான் இயக்குகிறார். இது தொடர்பான அதிகார பூர்வ அறிவிப்பை படத்தினுடைய தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இது குறித்து அவர்கள் வெளியிட்ட பதிவில், ஒரு உற்சாகமான பயணத்தின் தொடக்கம் சியான் 63 படத்திற்கு இயக்குனராக போடி ராஜ்குமாரை அறிவிப்பதில் மகிழ்ச்சி.
View this post on Instagram
அறிமுக இயக்குனர் உடன் கைகோர்ப்பு:
விக்ரம் சாரை போன்ற ஒரு சக்தி வாய்ந்த நடிகரை ஒரு அறிமுக இயக்குனர் இயக்குவது எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். சாமுராய் படத்திற்கு பிறகு புதுமுக இயக்குனருடன் விக்ரம் கைகோர்த்து இருக்கிறார். சாமுராய் படத்தை இயக்குனர் பாலாஜி சக்திவேல் தான் இயக்கியிருந்தார். அந்த படத்தின் மூலம் தான் இவர் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். கிட்டத்தட்ட 23 வருடங்களுக்கு பிறகு அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்க இருக்கிறார். தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.






