அட, ரம்யா கிருஷ்ணனுக்கு சோ ராமசாமி இப்படி ஒரு நெருங்கிய உறவினரா ? இது தெரியுமா ?

0
486
ramya
- Advertisement -

மறைந்த நடிகர் சோ ராமசாமியின் மருமகள் பற்றிய தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. 60, 70 காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் சோ ராமசாமி. இவரை அனைவரும் சோ என்று தான் அழைப்பார்கள். இவர் நடிகர் மட்டுமில்லாமல் பத்திரிக்கையாசிரியர், நாடகாசிரியர், இயக்குனர், வக்கீல், அரசியல்வாதி என பன்முகத் தன்மை கொண்டவர். ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சட்ட ஆலோசகரானார். பின் 1957 ஆம் ஆண்டு நாடகங்களில் எழுத துவங்கினார். அப்படியே மேடை நாடகங்களில் நடிக்கவும் துவங்கினார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார், 16 படங்களுக்கு கதையும் எழுதி இருக்கிறார், நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் 4 தொலைக்காட்சி படங்களுக்கு கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார். அதிலும் சோ- ரஜினி காம்பினேஷனில் வந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. பெரும்பாலும் இவர் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார். மேலும், இவர் அரசியல் வார பத்திரிகையின் நிருபர் மற்றும் ஆசிரியரும் ஆவார்.

- Advertisement -

மறைந்த நடிகர் சோ பற்றிய தகவல்:

இவரின் அரசியல் நையாண்டி எழுத்துக்கள் இவருக்கு பத்திரிக்கை உலகில் என்று தனி இடம் வகுத்திருந்தது. இவர் மாநிலங்களவை உறுப்பினராக வாஜ்பாயால் நியமனம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது .இப்படி சினிமா உலகிலும், அரசியலிலும் வெற்றி கண்ட சோ அவர்கள் 2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். அவருடைய இழப்பு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இவர் தொடங்கிய துக்ளக் இதழ் தற்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த நிலையில் நடிகர் சோவின் மருமகள் பற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகர் சோவின் மருமகள்:

அவர் வேற யாரும் இல்லைங்க, நம்ம படையப்பா நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் தான். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரம்யாகிருஷ்ணன். மறந்த நடிகர் சோவின் சகோதரி மகள் தான் ரம்யா கிருஷ்ணன். ரம்யாகிருஷ்ணன் சினிமாவில் நடிக்க வந்தது ஆரம்பத்தில் சோவுக்கு பிடிக்கவில்லையாம். இதை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதன் பின் படையப்பா படத்தில் அவர் நடித்த நடித்ததைப் பார்த்து சோ பாராட்டி, நான் நினைத்தது தவறு. படையப்பா படம் பார்த்துவிட்டு தான் உணர்ந்தேன் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

ரம்யா கிருஷ்ணன் முதல் படம்:

தற்போது சோவுடன் ரம்யா கிருஷ்ணன் இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே! என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். மேலும், 40ஐ கடந்தாலும் இளமை மாறாமல் இருக்கும் நடிகைகளில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். தனது 14 வயதில் இவர் ‘பலே மித்ருலு ‘ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுமானார். இதுவரை இவர் 200 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வெள்ளை மனசு’ என்ற படத்தில் தான் நடித்தார்.

ரம்யா கிருஷ்ணனின் திரைப்பயணம்:

அதன் பின்னர் படிக்காதவன், கேப்டன் பிரபாகரன் போன்ற பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு அமையவில்லை. இவருக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் 1999 ஆம் சூப்பர் ஸ்டார் நடித்த படையப்பா தான். அந்த படத்திற்கு பின்னர் இவரது மார்க்கெட் எகிறியது. பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்தார் ரம்யா. தற்போது இவர் பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

Advertisement