நான் என்ன பணமா கேட்டேன், அஜித்தை நேரில் சந்திக்க சென்று அசிங்கப்பட்டுள்ள வரலாறு பட பிரபலம்.

0
1861
ajith

மிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். அஜித் பற்றி பலர் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தான் இதுவரை நாம் பார்த்திருப்போம். ஆனால், வாய்ப்பு கேட்க அஜித் வீட்டிற்குசென்று அசிங்கப்படுத்தப்பட்டதாக பிரபல நடன இயக்குனரும் நடிகருமான சிவசங்கர் பேட்டி ஒன்றில் கூறி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித்தின் திரைப்பயணத்தில் வரலாறு திரைப்படம் மாபெரும் திருப்புமுனை படமாக அமைந்தது.

இந்த படத்தில் நடிகர் அஜித் மூன்று வேடத்தில் நடித்து இருப்பார். அதில் பிளாஸ் பேக்கில் வரும் அஜித் ஒரு பரதநாட்டிய கலைஞராக வருவார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘இன்னிசை அளவிலையே’ பாடலில் அஜித் அருமையாக பரதம் ஆடி இருப்பார். இந்த பாடலுக்கு சிவசங்கர் மாஸ்டர் தான் நடனனமைத்திருந்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சிவசங்கர் மாஸ்டர் பேசுகையில், நான் இதுவரை 10 மொழிகளில் 1300 படங்களுக்கு மேல் வேலை செய்திருக்கிறேன்.

- Advertisement -

தென்னிந்தியாவில் இருக்கும் பல்வேறு பெரிய நடிகர்களுடன் வேலை செய்து விட்டேன் என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே தொகுப்பாளர் வரலாறு படத்தில் அஜித்துடன் பணியாற்றியது குறித்து கேட்டார். சரி நான் தலைக்கு அந்த டான்ஸ் பண்ணி கொடுத்தேன் அவர் என்னை புகழ்ந்து பேசினார் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால். இதுவரை அவர் ஏதாவது நடிக்க என்னை அழைத்தாரா. அவருக்கு கெடுதலா பன்னேன் அவர் ஒரு வார்த்தை சொன்னால் எனக்கு எத்தனை படம் வரும்.

வீடியோவில் 13 நிமிடத்தில் பார்க்கவும்

ஆனால், சொல்லமாட்டார்கள் நான் என்ன பணம் காசு கேட்கிறேன். அவர் வீட்டுக்கு சென்று அவரை பார்க்க வேண்டுமென்று சென்றேன் ஆனால் அங்கே இருந்த கூர்க்கா ஜாம் ஜாம் என்று சொல்லிவிட்டான் அங்கே கேமரா இருக்கிறது நான் வந்து தெரியாது அவர் பார்த்திருப்பார் இல்ல இது எல்லாம் மன வருத்தமான விஷயம் அவர் நல்ல மனிதன் அவர் நல்லா இருக்கட்டும் அவ்வளவுதான்

-விளம்பரம்-

Advertisement