சுட்டி குழந்தை படத்தில் நடித்த ‘அகில்’ யார் தெரியுமா ! பிரபல நடிகரின் மகன் ! புகைப்படம் உள்ளே

0
3186
chutti-kuzhanthai

1995ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடித்து வெளிவந்த படம்தான் சுட்டி குழந்தை. ஹாலிவுட் படமான The Baby’s Day Out என்ற படத்தின் ரீமேக் தான் இந்த சுட்டி குழந்தை படம்.

Sisindri Movie

இந்த படத்தில் நடித்த குழந்தை வேறு யாரும் இல்லை. நாகர்ஜுனாவின் இரண்டாவது மகன் அகில்தான். நடிகை சமந்தாவின் கணவர் நாக சைதன்யாவின் தம்பிதான் இந்த அகில்.

1994ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தவர் அகில். இவர் பிறந்த ஒரு வருடத்தில் நடித்தது தான் சுட்டி குழந்தை படம். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதினை பெற்றார் அகில். ஹைதராபாத்தில் உள்ள சைதன்யா வித்யாலயா பள்ளியில் படித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் சென்று இரண்டு வருடம் தனது பட்டப்படிப்பை முடித்தார்.

akhil actor

nagarjuna family

அதன் பின்னர் நடிப்பிற்கென்றே, நியார்க்கில் உள்ள ஸ்டார்பர்க் தியேட்டர் அண்ட் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஆக்டிங் கோர்ஸ் முடித்தார். அதன் பின்னர் இந்தியா திரும்பி ‘மனா’ என்ற தெலுங்கு படத்தில் சின்ன ரோலில் நடித்தார்.

Akhil-actor

அதன் பின்னர் 2015ல் அகில் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்திற்காக பிலிம்பேர் பெஸ்ட் டெப்யூட் ஆக்டர் அவார்டும் வாங்கினார். இவரது இரண்டாவது படமான ‘ஹாலோ’ தற்போது தெலுங்கு சினிமாவில் வெறிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.