அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா உடல்நிலை – இப்போ இந்த சிகிச்சை தானாம்.

0
277
samantha
- Advertisement -

இந்திய முன்னணி நடிகையான சமந்தா Myositis என்னும் Autoimmune நோய் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது எப்படியிருக்கிறார் என்ற தகவலானது வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த “விண்ணைத்தேடி வருவாயா” என்ற திரைப்படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு கதாநாயகர்களுடன் ஒரே நேரத்தில் அவர்களின் திரைப்படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து பானா, நான் ஈ, அஞ்சான், கத்தி போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்தியாவின் பல மொழி படங்களில் நடிகை சம்ந்தா நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த “காத்துவாக்குல ரெண்டு” காதல் என்ற படத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து சமந்தா நடித்திருந்தார். இவர் இந்தி திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தாலும் இந்தியிலும் இவருக்கு அதிக ரசிகரக்ள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விண்ணைத்தேடி வருவாயா என்ற தமிழ் படத்தின் தெலுங்கு படமான “யே மாயா சேஷவா” என்ற திரைப்படத்தின் நடிகர் நாக சைதன்யா பல காலங்களாக காதலித்து கடந்த 2017 திருமணம் செய்து கொண்டனர். சில வருடங்கள் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது இந்நிலையில் திடீரென இருவரும் பிரிவதாக கடந்த ஆண்டு தங்களில் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர். இதற்கு நாக சைதன்யா மீது பல விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் சமீபத்தில் தனக்கு Myositis என்னும் Autoimmune நோய் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக சிகிச்சை செய்து வருவதாகவும் கூறியுந்தார். இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி வெளியான “யாசோதா” படமானது தமிழ் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் செய்யும் பேட்டியில் தனக்கு ஏற்பட்டுள்ள இந்த நோய் குறித்து நடிகை சமந்தா கண்ணீர் மல்க பேசிய விடியோவான அப்போது வைரலாகியிருந்து. மேலும் படத்தின் டப்பிங் கூட மருத்துவமனையில் இருந்துதான் செய்திருந்தார். பின்னர் தற்போது தான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.

-விளம்பரம்-

இப்படிப்பட்ட நிலையில் நடிகை சமந்தாவின் உடல் நிலை எப்படி இருக்கிறது என்ற தகவலானது தற்போது கிடைத்துள்ளது. அதாவது மருத்துவமனையிலிருந்து வந்து தனது வீட்டில் ஓய்வெடுக்கும் சமந்தாவிற்கு உள்ளூர் ஆயுர்வேத மருத்துவர்களால் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. Myositis என்ற நோயை குணமாக்க மருந்துகள் இன்றளவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் இவர் தற்போது எடுத்துக்கொள்ளும் ஆயுர்வேத மருத்துவம் நல்ல பலனை தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement