2024 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 2024 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில தினங்கள் தான் இருக்கிறது. இந்த ஆண்டில் திரை உலகை சேர்ந்த பல நடிகர், நடிகைகள் திருமணம் செய்து இருக்கிறார்கள். அந்தப் பட்டியல் இதோ,

ஸ்வாசிகா-பிரேம் ஜேக்கப்:
மலையாள மொழியில் பிரபலமாக அறியப்பட்டவர் ஸ்வாசிகா. இவர் தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் தனக்கென இடத்தை பிடித்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் ஸ்வாசிகா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த லப்பர் பந்து படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் என்ற தொடரின் நாயகன் பிரேம் ஜேக்கப் என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இவர்களுடைய திருமணம் ஜனவரி 24ஆம் தேதி கேரளாவில் சிறப்பாக நடைபெற்று இருந்தது.

ரகுல் பிரீத் சிங்- ஜாக்கி பக்னானி:
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவராக ரகுல் ப்ரீத் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தந்திருக்கின்றது. இவர் தற்போது பாலிவுட்டிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலர் ஜாக்கி பக்னானியை கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருமே பல வருடங்களாக காதலித்து வந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அபர்ணா தாஸ்- தீபக் பரம்போல்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக அபர்ணாதாஸ் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவர் மலையாள நடிகர் தீபக் பரம்போல் என்பவரை ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுடையதும் காதல் திருமணமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா- உமாபதி:
தமிழ் சினிமாவின் ஆக்சன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும், பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உபாபதியும் காதலித்து வந்திருக்கிறார்கள். இவர்களுடைய திருமணத்திற்கு இருவீட்டாரும் கிரீன் சிக்னல் கொடுத்ததால் ஜூன் மாதம் பத்தாம் தேதி இவர்களுடைய திருமணம் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. அதோடு இவர்கள் இருவருமே சினிமாவில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

சோனாக்ஷி சின்ஹா-ஜாகிர் இக்பால்:
லிங்கா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சோனாக்ஷி. இவர் பெரும்பாலும் பாலிவுட் படங்களில் தான் நடித்து இருக்கிறார். இவர் ஜாகிர் இக்பால் என்பவரை கடந்த ஜூன் 23ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்கள் நான்கு வருடங்களாக காதலித்து வந்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

வரலட்சுமி சரத்குமார்- நிக்கோலாய்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் வரலக்ஷ்மியும்ஒருவர். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் தாய்லாந்தை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் என்பவரை கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் எளிமையாக தாய்லாந்தில் நடைபெற்று இருந்தது.

மேகா ஆகாஷ்-சாய் விஷ்ணு:
தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மேகா ஆகாஷ். இவர் தமிழில் ஒரு பக்க கதை, பேட்ட, மாநாடு போன்ற சில படங்களில் நடித்திருந்தார். இவர் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசின் மகன் சாய் விஷ்ணுவை நீண்ட நாட்களாக காதலித்து வந்திருக்கிறார். பின் இவர்கள் திருமணம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி நடைபெற்றது.

சித்தார்த்- அதிதி ராவ்:
தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் சித்தார்த் ஒருவர். அதேபோல் அதிதி ராவும் பிரபல நடிகை. இவர்கள் இருவருமே நீண்ட நாட்களாக காதலித்து வந்திருக்கிறார்கள். பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று இருந்தது.

ரம்யா பாண்டியன்- லோவல் தவான்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். இவர் கடந்த ஆண்டு பெங்களூரில் செயல்பட்டு வரும் யோக மையத்தில் சேர்ந்திருந்தார். இவர் அங்கு பணியாற்றிய யோகா மாஸ்டர் லோவல் தவான் என்பவரை காதலித்து வந்தார். இவர்களுடைய திருமணம் நவம்பர் எட்டாம் தேதி நடைபெற்று இருந்தது.

நாக சைதன்யா- சோபிதா:
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவருடைய தந்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா என்பது குறிப்பிடத்தக்கது. நாக சைதன்யா- சமந்தா இருவருமே காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் பிரிந்து விட்டார்கள். இதை அடுத்து இவர் நடிகை சோபிதாவை காதலித்தார். பின் இவர்கள் திருமணம் டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

காளிதாஸ்- தாரணி:
இந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜெயராம். இவருடைய மகன் தான் காளிதாஸ் ஜெயராம். இவர் தமிழில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் மாடல் அழகியான தாரணியை சில வருடங்களாக காதல் வந்திருக்கிறார். பின் டிசம்பர் எட்டாம் தேதி இவர்கள் திருமணம் கேரளா குருவாயூர் கோவில் நடைபெற்று இருந்தது.

கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி தட்டில்:
இந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் ஒருவர். 15 வருடங்களாக தன்னுடைய பள்ளி கால நண்பர் ஆன ஆண்டனி என்பவரை காதலித்து வந்திருக்கிறார். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததால் இவர்களுடைய திருமணம் டிசம்பர் 12ம் கோவாவில் இந்து முறைப்படி நடைபெற்று இருந்தது. பின்னர் டிசம்பர் 15ஆம் தேதி கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்று இருந்தது.






