கொரோனாவால் இனி திரைப்படங்களில் முத்தக்காட்சிகளுக்கு தடையா?

0
602
- Advertisement -

திரையலகில் எந்த ஒரு விஷயமும் எடுத்தோம், உடனே முடித்தோம் என்று இருக்காது. அனைத்து விதமான பணிகளுக்கும் முறையான திட்டமிடல் இருக்கும்.அந்த திட்டமிடல் சரியாக இருக்கையில் மட்டுமே தயாரிப்பாளருக்கு நல்லது. ஒவ்வொரு படத்தின் கதைக் களம், பட்ஜெட் மற்றும் நடிகர்களின் கால்ஷீட் என அனைத்தையும் வைத்தே திட்டமிட்டு ஒரு படம் உருவாகி கொண்டிருக்கிறது. அந்த படத்தின் பணிகளுக்கான நாட்கள் எண்ணிக்கை எல்லா படங்களுக்கும் ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொரு படங்களுக்கும் அது மாறும்.

This image has an empty alt attribute; its file name is 202004150835264878_Tamil_News_Ban-for-kiss-scenes-in-films_SECVPF.gif

இதற்கிடையில் இந்த திட்டமிடலில், எதிர் பாராத சில சம்பவங்கள் நடக்கும். ஆகையால், ஒவ்வொரு விஷயமும் திட்டமிட்டதை தாண்டி கால தாமதமாக நடைபெறும் அபாயமும் உண்டு. அப்படி பட்ட சம்பவங்களுக்கு பல உதாரணங்கள் இருக்கிறது. இதனால் மிகவும் பாதிப்படையப் போவது அந்த படங்களின் தயாரிப்பாளர்கள் தான்.

- Advertisement -

இதற்கிடையில் இந்த திட்டமிடலில், எதிர் பாராத சில சம்பவங்கள் நடக்கும். ஆகையால், ஒவ்வொரு விஷயமும் திட்டமிட்டதை தாண்டி கால தாமதமாக நடைபெறும் அபாயமும் உண்டு. அப்படி பட்ட சம்பவங்களுக்கு பல உதாரணங்கள் இருக்கிறது. இதனால் மிகவும் பாதிப்படையப் போவது அந்த படங்களின் தயாரிப்பாளர்கள் தான்.

தற்போது, உலகமெங்கும் ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

-விளம்பரம்-
Nayanthara, Vignesh Shivan kiss on Valentine's Day - Tamil Nadu ...

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இந்நிலையில், இன்னொரு ஷாக் தகவல் வந்திருக்கிறது. பொதுவாகவே இப்போது இருக்கும் சுழலில் சினிமாவில் நெருக்கமான காதல் காட்சிகளும், முத்த காட்சிகளும் அதிக அளவில் படங்களில் இடம் பெறுகின்றது. தற்போது, நெருக்கமான காதல் காட்சிகளையும், முத்த காட்சிகளையும் ஷூட் செய்வதில் ஒரு சிக்கல் வந்திருக்கிறது.

ஆம்.. ‘கொரோனா’ பிரச்சனை முடிந்த பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டில் நெருக்கமான காதல் காட்சிகளிலும், முத்த காட்சிகளிலும் நடிக்க தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பிரபல பாலிவுட் இயக்குநர் சுஜித் சிர்கார் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கொரோனா பிரச்சனை முடிந்த பிறகு, படங்களில் நாம் நினைத்தபடி நெருக்கமான காதல் காட்சிகளையும், முத்த காட்சிகளையும் எவ்வாறு ஷூட் செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை” என்று பதிவிட்டிருக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகை தியா மிர்ஸா இது தொடர்பாக பேசுகையில் “பொதுவாகவே ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைத்து வேலைகளுமே நெருக்கமாகத் தான் நடைபெறும். ஒரு சீனை ஷூட் செய்யும் போது சேர்ந்தே தான் பணியாற்றுவார்கள். இந்த கொரோனா பிரச்சனையால் முகமூடி, கையுறைகள் அணிந்து தான் இனிமேல் ஷூட்டிங் ஸ்பாட்டில் கலந்து கொள்ளும் நிலை வந்து விடுமோ?.. அதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement