பள்ளி நோட்டில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மகன் எழுதிய பொங்கல் கவிதைகள்.

0
16908
na-muthukumar

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடலாசிரியர்களில் நா.முத்துக்குமாரும் ஒருவர் ஆவார். இவர் திரைப்பட பாடலாசியர் மட்டுமில்லாமல் கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் என பன்முகம் கொண்டவர். நா.முத்துக்குமார் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் கிராமத்தில் பிறந்தவர். இவர் இயற்பியல் மாணவர் ஆனார். ஆனால், இவருக்கு தமிழ் மீது உள்ள காதலால் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகலை பயின்றார். அது மட்டும் இல்லாமல் இவர் யாப்பிலக்கணத்தை முறையாக பயின்றவர். மேலும், நா.முத்துக்குமார் அவர்களின் கவிதைகள் படிக்காத பாமரனுக்கும் புரியும் அளவிற்கு எளிமை கொண்டவை. இவர் சினிமா உலகில் இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையில் தான் திரைத்துறைக்கு வந்தார். பின் தன் கவிதைகளால் ரசிகர்களை கவர்ந்தார்.

இதுவரை சுமார் 1,500 திரைப்பட பாடல்களை எழுதியவர். அதுமட்டும் இல்லாமல் இவர் தூசிகள், நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன், போன்ற பல கவிதைகளின் தொகுப்புகளையும், சில்க்சிட்டி என்ற நாவலையும் எழுதி உள்ளார். மேலும், இவர் தங்க மீன்கள், சைவம் ஆகிய படங்களில் பாடல் எழுதியதற்காக இரண்டு தேசிய விருதுகளை வாங்கி உள்ளார். கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி தனது 41-வது வயதில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவருக்கு ஜீவலட்சுமி என்ற மனைவியும், ஆதவன் என்ற மகனும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மகன் பொங்கலுக்காக எழுதிய கவிதைகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ஆதவன் எழுதிய அந்த கவிதைகள்,

இதையும் பாருங்க : 96 ஜானு குழந்தையுடன் இருப்பது போல இருக்கீங்க. பிரபல தொகுப்பாளினியை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்.

- Advertisement -

போகி கவிதை:

“நீ உன் ஆணவத்தை அன்பில் எறி
இதை செய்பவனுக்கு வாழ்க்கை சரி
கோயிலில் இருக்கும் தேரு
பானையை செய்யத் தேவை சேறு
வீட்டில் இருக்கும் வீண் பொருட்களை வெளியே போடு
இல்லையென்றால் வீடு ஆகிவிடும் காடு
தமிழரின் பெருமை மண் வாசனை
இந்த கவிதை என் யோசனை!”

-விளம்பரம்-

தைப் பொங்கல் கவிதை:

“உழவர்களை அண்ணாந்து பாரு
உலகத்தில் அன்பை சேரு
அவர்களால் தான் நமக்கு கிடைக்கிறது சோறு
அவர்கள் இல்லையென்றால் சோற்றுக்கு பெரும் பாடு
உழவர்கள் நமது சொந்தம்
இதை சொன்னது தமிழர் பந்தம்
பொங்கல் இன்றும் என்றும் சொல்லும்
இவர்கள் இல்லையென்றால் கிடைக்காது நெல்லும்!”

மாட்டு பொங்கல் கவிதை:

“வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு
நீ உன் வேட்டியைத் தூக்கிக்கட்டு
கரும்பை இரண்டாக வெட்டு
நீ உன் துணிச்சலுக்கு கை தட்டு
சிப்பிக்குள் இருக்கும் முத்து
மாடு தமிழர்களின் சொத்து
மாடு எங்கள் சாமி
நீ உன் அன்பை இங்கு காமி!”

காணும் பொங்கல் கவிதை:

“உறவினர்கள் வந்தார்களா என்று பாரு
உலகத்தில் நல்ல நண்பர்களை சேரு
நீ அழகாகக் கோலம் போடு
உன் நல்ல உள்ளத்தோடு
நீ உனக்குள் கடவுளைத் தேடு
இல்லையென்றால் நீ படுவாய் பாடு
பெண்ணைக் கண்ணாகப் பாரு
இல்லையென்றால் கிடைக்காது சோறு!”

Advertisement