96 ஜானு குழந்தையுடன் இருப்பது போல இருக்கீங்க. பிரபல தொகுப்பாளினியை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்.

0
56521
96
- Advertisement -

சன் ம்யூசிக் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகத்தில் வருவது அஞ்சனா ரங்கன் தான். இவர் தொலைக்காட்சிகளில் வீடியோ ஜாக்கியாக தான் அறிமுகமானர். இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக உள்ளவர் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன். இவர் சன் ம்யூசிக் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். மேலும், இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த படம் “கயல்”.

-விளம்பரம்-
View this post on Instagram

My whole ❤️ ! #kissmootales !

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

இந்த படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் சந்திரனை 2016 ஆம் ஆண்டு தொகுப்பாளினி அஞ்சனா திருமணம் செய்து கொண்டார். அதோடு இவருக்கு சமீபத்தில் தான் ஒரு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இதனால் இவர் சில ஆண்டுகள் மீடியாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொகுப்பாளினியாக ரி-என்ட்ரி கொடுத்து உள்ளார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்குபெற்று வருகிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் தொகுப்பாளினி அஞ்சனா ஒருவர். தொகுப்பாளினி அஞ்சனா அவர்கள் அடிக்கடி சமூக வளைத்தளத்தில் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

- Advertisement -

அந்த வகையில் சமீபத்தில் தொகுப்பாளினி அஞ்சனா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய குழந்தை மற்றும் தன் கணவர் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த புகைப்படம் குறித்து கருத்து ஒன்று தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறியது, உங்கள் குழந்தை ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறது. உடலில் ஏதாவது பிரச்சனையா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் நடிகர் சந்திரன் அவர்கள் மிக கடுப்பாகி பதில் கருத்தை தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறியது, என் குழந்தை நன்றாக ஆரோக்கியமாக தான் உள்ளான். ஒரு குழந்தை குண்டாக இருந்தால் தான் ஆரோக்கியம் என்பது சொல்வது முட்டாள் தனமான ஒன்று.

-விளம்பரம்-

குழந்தை ஒல்லியாக இருந்தாலும் ஆரோக்கியம் தான். உண்மையை சொல்லப் போனால் ஒல்லியாக இருக்கிற குழந்தைகள் தான் ஆரோக்கியமாக இருக்கும். குண்டாக இருக்கும் குழந்தைகள் உடம்பில் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும். அதோடு இந்த மாதிரி குழந்தை குறித்து உங்களுக்கு தோன்றும் கருத்துக்களை பதிவிடாதிர்கள் என்றும் கூறி இருந்தார். மேலும், நடிகர் சந்திரன் அவர்கள் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து உ ள்ளார். அதுக்கு முன்னாடி திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் தான் திரையரங்குகளில் வெளியானது.

Advertisement