அவரிடம் பேச நாங்கள் முயற்சிக்கிறோம், ஆனா – நடிகர் ஸ்ரீ பற்றி இறுக்கப்பற்று தயாரிப்பாளர் போட்ட பதிவு

0
61
- Advertisement -

நடிகர் ஸ்ரீயின் நிலைமை குறித்து இறுகப்பற்று படத்தின் தயாரிப்பாளர் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமாக அறியப்பட்டவர் நடிகர் ஸ்ரீ. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகியிருந்த கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் தான் நடிக்க வந்தார். இதில் இவர் ஸ்ரீராம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த தொடரின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதன் படி இவர் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த வழக்கு எண் 18 கீழ் 9 என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் தெருவில் தள்ளுவண்டி கடை வைத்திருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்ட பெற்றிருந்தது. இதனை இவர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்கு பின் இவர் வில் அம்பு, மாநகரம் போன்ற படங்களில் எல்லாம் நடித்திருந்தார்.

- Advertisement -

ஸ்ரீ குறித்த தகவல்:

குறிப்பாக, லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த இறுக்கப்பற்று படத்தில் ஸ்ரீ நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் யுவராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா, அபர்ணதி, விதார்த், சானியா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், இந்த படத்திற்கு பிறகு ஸ்ரீ நடிப்பில் எந்த படமுமே வெளியாகவில்லை.

ஸ்ரீ நிலைமை:

இவர் சினிமாவில் இல்லாததால் ரசிகர்கள் பலருமே ஸ்ரீக்கு என்னாச்சு? எதனால் அவர் படங்களில் நடிக்கவில்லை? ஏதாவது பிரச்சனையா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர், உடல் மெலிந்து நீண்ட தலை முடியுடன் ரொம்ப பார்க்கவே பரிதாபமான நிலையில் இருக்கிறார். இது ஸ்ரீயா? எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே? என்றெல்லாம் ரசிகர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஸ்ரீ நிலைமைக்கு காரணம்:

இன்னொரு தரப்பினர் இது உண்மையாகவே ஸ்ரீயின் புகைப்படமா? இல்ல வேறொரு வேறு யாரேனும் அதை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்களா? என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள். மேலும், இவரின் இந்த நிலைமைக்கு காரணம், இவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார் என்றும், சினிமா வாய்ப்பு கிடைக்காததால் இவர் மன வேதனையில் போதை பொருளுக்கு அடிமையானார் என்றெல்லாம் கூறப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே என்ன நடந்தது? என்று ஸ்ரீ சொன்னால் தான் தெரியும்.

இறுக்கப்பற்று தயாரிப்பாளர் பதிவு:

இப்படி இருக்கும் நிலையில் இறுக்கப்பற்று படத்தினுடைய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் நடிகர் ஸ்ரீ குறித்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நடிகர் ஸ்ரீயினுடைய உடல்நிலை குறித்து நாங்கள் உண்மையிலேயே ரொம்ப அக்கறையோடு இருக்கிறோம். அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் உட்பட நாங்களுமே அவரை தொடர்பு கொள்ள நீண்ட நாட்களாக முயற்சித்து வருகிறோம். அதை சுற்றி நிறைய விஷயங்கள் வெளிவராதது துரதிஷ்டவசமானது. நடிகர் ஸ்ரீயை தொடர்பு கொண்டு அவரை நல்ல உடல் நலத்துடன் மீட்டு கொண்டு வருவது தான் எங்களின் முதன்மையான நோக்கம். அதற்கு யாரேனும் உதவிகரமாக இருந்தால் அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement