Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Sap44
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.02.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஆதி-அறிவழகன் கூட்டணியில் வெளிவந்த சப்தம் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

எழுதியவர்subhashini28 பிப்ரவரி, 2025 அன்று 12:27 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் ஆதி. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சப்தம். இந்த படத்தை இயக்குனர் அறிவழகன் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே ஆதி நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் ஈரம் என்ற படம் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் லட்சுமிமேனன், சிம்ரன், லைலா, எம்.எஸ் பாஸ்கர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார். பேய் கதைகளத்தை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

ஆதி-அறிவழகன் கூட்டணியில் வெளிவந்த சப்தம் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

கதைக்களம்:

படத்தில் ஹீரோ ஆதி மும்பையில் ஆவிகளை சப்தங்கள் மூலம் கண்டறியும் நிபுணராக இருக்கிறார். இதனால் தன்னிடம் வந்து குறை சொல்லும் ஒவ்வொருவரின் அமானுஷ்ய பிரச்சினைகளையெல்லாம் சரி செய்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் மூணாரில் மருத்துவ கல்லூரியில் மாணவிகள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

அதற்குப்பின் ஆவிகள் இருக்கிறதா? வேறு ஏதாவது காரணமா? என்பதை தெரிந்து கொள்ள ஹீரோ ஆதியை அழைக்கிறார்கள். ஆதி கல்லூரிக்குள் வந்த பிறகு சப்தங்கள் மூலம் ஆவிகள் இருக்கிறதா? என்று சோதனை செய்கிறார். இருந்தும் அடுத்தடுத்து கொலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கடைசியில் கொலைகளுக்கு காரணம் என்ன? உண்மையிலேயே அதற்கு பின் இருப்பது அமானுஷ்யமா? அதை ஆதி கண்டுபிடித்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.

ஆதி-அறிவழகன் கூட்டணியில் வெளிவந்த சப்தம் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

ஈரம் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் அறிவழகன்- நடிகர் ஆதி கூட்டணியில் வெளிவந்த சப்தம் படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது. அட்டகாசமான ஒரு தரமான படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மேக்கிங் சிறப்பாக இருக்கிறது. படம் முழுவதும் ஹீரோ சுமந்து சென்றார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஆதியின் நடிப்பு அட்டகாசமாக இருந்திருக்கிறது.

இவரை அடுத்து படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சிம்ரன், லைலா, லக்ஷ்மி மேனன எல்லோருமே சிறப்பான வேலையை செய்திருக்கிறார்கள் என்று தான் சொல்லணும். பேய் கதைகளுக்கெல்லாம் லாஜிக் தேவை இல்லை என்றாலும் நம்பும் படியாக கதைக்களத்தை இயக்குனர் காண்பித்து இருக்கிறார். ஆனால், உணர்வுபூர்வமான காட்சிகளில் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஆதி-அறிவழகன் கூட்டணியில் வெளிவந்த சப்தம் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அதுதான் சரியாக பார்வையாளர்கள் மத்தியில் கடந்து செல்லவில்லை. தமனின் பின்னணி இசை படத்திற்கு பட்டையை கிளப்பி இருக்கிறது. படத்தின் தலைப்பிற்கு ஏற்ப சில இடங்கள் காது வலிக்கும் அளவிற்கு சத்தமாக இருக்கிறது. அதை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். ஹாலிவுட் தரத்திற்கு படத்தின் மேக்கிங்கை இயக்குனர் கொண்டு சென்று இருப்பது பெரிய விஷயம். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் தான் கொஞ்சம் சொதப்பல். மொத்தத்தில் எல்லோரும் ஒருமுறை சென்று பார்க்கும் படமாக தான் சப்தம் இருக்கிறது.

நிறை:

நடிகர்களின் நடிப்பு

கதைக்களம்

பின்னணி இசை ஒளிப்பதிவு

மேக்கிங் சூப்பர்

முதல் பாதி நன்றாக இருக்கிறது

ஆதி-அறிவழகன் கூட்டணியில் வெளிவந்த சப்தம் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

குறை:

எமோஷனல் காட்சிகள் சரியாக செட் ஆகவில்லை.

இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கொடுத்திருக்கலாம்.

கதைக்களம் கொண்டு சென்ற விதத்திலும் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கலாம்

சில இடங்களில் அதிகமான இரைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது

மொத்தத்தில் சப்தம் - புது முயற்சி

தலைப்புகள்
#சப்தம்#Sabdham Movie Review#Sabdham Movie#சப்தம் விமர்சனம்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement