Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
சிஷ்யனை இயக்கும் குரு: ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின் நடிக்கும் 'சுப்ரமணி'
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2026.01.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சிஷ்யனை இயக்கும் குரு: ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின் நடிக்கும் 'சுப்ரமணி'

K
எழுதியவர்krithika1 ஜனவரி, 2026 அன்று 02:12 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

'பிரியமுடன்', 'யூத்', 'ஜித்தன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் 'சுப்ரமணி'.தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் பரபரப்பான கிரைம் திரில்லரான 'சுப்ரமணி' திரைப்படத்தில் இயக்குநர் செல்வாவின் உதவியாளராக தளபதி விஜய் நடித்த 'யூத்' மற்றும் ஜித்தன் ரமேஷ் நடித்த 'ஜித்தன்' திரைப்படங்களில் பணியாற்றிய மிஷ்கின் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சிஷ்யனை இயக்கும் குரு: ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின் நடிக்கும் 'சுப்ரமணி'

ரிச்சர்ட் ரிஷி மற்றும் நட்டி என்கிற நட்ராஜன் சுப்பிரமணியம் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'சுப்ரமணி' திரைப்படம் குறித்துப் பேசிய இயக்குநர் ஆர் கே செல்வா, "இப்படத்தில் மிஷ்கினை இயக்கியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுவரை ஏற்றிராத மிக முக்கிய கதாபாத்திரத்தை அவர் இப்படத்தில் ஏற்று நடித்துள்ளார், அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் என்னுடைய உதவி இயக்குநராகவே மீண்டும் மாறி அவர் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.

சில காட்சிகளையும் அவர் இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. ரிச்சர்ட் ரிஷி மற்றும் நட்டியும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். ஐந்து கொடூர கொலை சம்பவங்களை மூன்று காவல் அதிகாரிகளின் பார்வையில் வெவ்வேறு கோணங்களில் அணுகி இந்த படு பாதக சம்பவங்களை செய்யும் இருண்ட அரக்கனை மேலும் குற்ற சம்பவங்கள் நிகழ்வதற்குள் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதை விவரிக்கும் வகையில் திரைக்கதையை இப்படத்தில் அமைத்துள்ளோம். வித்தியாசமான கதைக்களங்களை எப்போதும் வரவேற்கும் தமிழ் ரசிகர்கள் இப்படத்திற்கும் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்," என்று கூறினார்.

ஆர் கே செல்வா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் 'சுப்ரமணி' திரைப்படத்தில் பிரணவ் மற்றும் பாலாஜி ப்ராஜெக்ட் ஹெட் ஆகவும் இணை தயாரிப்பாளர்கள் ஆகவும் பணியாற்றியுள்ளனர். அப்சல் பெய்க் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஆவார். தயாரிப்பு நிர்வாகி: எம். ஜெ. பாரதி

தெலுங்கு பிக்பாஸ் புகழ் திவ்யா 'சுப்ரமணி' படத்தின் நாயகியாக நடித்துள்ளார். சென்னை எக்ஸ்பிரஸ் புகழ் ஜாஸ்பர், லொள்ளுசபா சுவாமிநாதன் இப்படத்தில் நடித்துள்ளனர். அகிலேஷ் மற்றும் சுந்தர் ராம் கிருஷ்ணன் 'சுப்ரமணி' படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' புகழ் சனுக்யா இசையமைக்க அஸ்மின் பாடல்களை எழுதியுள்ளார். படத்தொகுப்பை டான் மேக்ஸின் உதவியாளரான சுஜிர் பாபு கையாள சண்டை பயிற்சிக்கு ராம்போ விமல் பொறுப்பேற்றுள்ளார். எஃபக்ட்ஸ்: சேது, விஎஃப்எக்ஸ்: சுனில் (69 ஷேட்ஸ்), டிசைன்ஸ்: குமரன் கே, மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின், ரிச்சர்ட் ரிஷி, நட்டி நடிக்கும் 'சுப்ரமணி' திரைப்படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிடும் பணிகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

எழுதியவர் குறிப்பு
K
krithika
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement