Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
சினிமா, மோட்டார் ரேஸ், வெற்றி, தோல்வி, சவால்கள், ரசிகர்களின் அன்பு - அஜித் வெளியிட்ட நன்றி அறிக்கை
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.08.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 3 நிமிடம்

சினிமா, மோட்டார் ரேஸ், வெற்றி, தோல்வி, சவால்கள், ரசிகர்களின் அன்பு - அஜித் வெளியிட்ட நன்றி அறிக்கை

எழுதியவர்subhashini4 ஆகஸ்ட், 2025 அன்று 09:07 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

ரசிகர்களுக்காக நடிகர் அஜித் வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த குட் பேட் அக்லி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூல் செய்தது. இந்த நிலையில் சினிமாவில் நுழைந்து 33 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அஜித் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சினிமா, மோட்டார் ரேஸ், வெற்றி, தோல்வி, சவால்கள், ரசிகர்களின் அன்பு - அஜித் வெளியிட்ட நன்றி அறிக்கை

அதில் அவர், சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்திற்காக முழுமனதுடன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறேன். இந்தப் பயணம் எனக்கு எளிதாக இல்லை. இந்தத் துறைக்கு எந்தப் பின்புலமோ அல்லது யாருடைய சிபாரிசோ இல்லாமல்தான் நுழைந்தேன். முழுக்க முழுக்க என் சுய முயற்சியால் மட்டுமே சினிமாத் துறைக்குள் நுழைந்தேன். காயங்கள், மீண்டு வருதல், தோல்வி மற்றும் அமைதி என வாழ்க்கை என்னை பல வழிகளில் சோதித்தது. ஆனால், நான் தளர்ந்து போகவில்லை. முயற்சி செய்தேன்.

அஜித் அறிக்கை:

மீண்டு வந்தேன். தொடர்ந்து முன்னேறுகிறேன்! எண்ணில் அடங்காத அளவுக்கு வெற்றியும் தோல்வியும் சினிமாவில் பார்த்திருக்கிறேன் ஒவ்வொரு முறையும் என் வெற்றி மீது நான் சந்தேகம் கொள்ளும்போதும் உங்கள் அன்புதான் என்னை மீண்டு வர செய்துள்ளது. இந்த அன்புக்கு என்றும் உண்மையாக இருப்பேன். இந்த அன்பை எப்போதும் இறுகப் பிடித்திருப்பேன். ஆனால், என் பயணம் சினிமாவோடு முடிந்துவிடவில்லை. மோட்டார் ரேசிங் உலகில் வேறுவிதமான சவால்களை எதிர்கொண்டேன். அந்த டிராக் நீங்கள் யார் என்பதை பொருட்படுத்தாது மன்னிக்காது. அதற்கு தேவை Respect Focus & Grill அந்த டிராக்கில் பல முறை ரத்தம் வரும் அளவுக்கு விபத்து ஏற்பட்டது. என்னை பலமுறை தூக்கி எறிந்திருக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து பயணிக்கிறேன்.

சினிமா, மோட்டார் ரேஸ், வெற்றி, தோல்வி, சவால்கள், ரசிகர்களின் அன்பு - அஜித் வெளியிட்ட நன்றி அறிக்கை

ரேஸ் பற்றி சொன்னது:

இந்த பயணம் விருதுகளுக்காகவோ அல்லது தலைப்பு செய்திகளுக்காகவோ அல்ல ஒழுக்கம், துணிவு மற்றும் ஒரு குறிக்கோளுக்காக ஏற்படும் வலி என இவற்றின் மூலம் என்னை எனக்கே நிரூபிக்க பயணிக்கிறேன். வீரம் மிக்க நாட்டின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன். “அஜித்குமார் மோட்டார் ரேசிங்" என்ற பெயரில் 2025 ஆம் ஆண்டு மீண்டும் விளையாட்டுத் துறைக்கு மட்டும் நுழையவில்லை. வயது வரம்பு, அச்சம் தடைகள் இதைப்பார்த்து தங்கள் மீதே சந்தேகம் கொள்பவர்களுக்கு உத்வேகம் கொடுக்கவும்தான் விளையாட்டுத் துறைக்குள் மீண்டும் வந்தேன். நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு முக்கிய காரணம் என் ரசிகர்களின் அன்பும் ஆதரவும்தான் நன்றி! உங்கள் அன்பை என் சுயலாபத்திற்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த மாட்டேன்.

AKs thanks giving note on his 33 rd year in the film industry. pic.twitter.com/DlBW22LcaT

— Suresh Chandra (@SureshChandraa) August 3, 2025

நன்றி சொன்ன அஜித்:

சினிமாவில் எனக்கான பாதையை வடிவமைத்து, வழிநடத்தி, என்னை நம்பி என் வளர்ச்சிக்கு உதவிய அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள். சாட்டிலைட் மற்றும் சமூக ஊடகங்கள் விமர்சர்கள் அனைவருக்கும் நன்றி! பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழகத்தின் மதிப்பிற்குரிய தலைவர்கள் மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எனக்கு அன்பாக இருந்த அதிகாரிகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன். எனக்கு மதிப்புமிக்க பத்ம பூஷண் விருது வழங்கி, எனது சமூக மரியாதை மற்றும் பொறுப்பை மேலும் பலப்படுத்தியதற்காக இந்திய ஜனாதிபதி மேடம் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசுக்கு நன்றி கூறுகிறேன். என் வாழ்வின் பலம் மனைவி ஷாலினிதான். எல்லா தருணங்களிலும் அவர் என்னுடன் நின்றிருக்கிறார்.

என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் இருவரும் என் வாழ்விற்கு அர்த்தம் கொடுத்தவர்கள். சமூகத்தின் மீது அக்கறை கொள்ளும் மனப்பான்மையுடன் என்னை வளர்த்த மறைந்த என் தந்தை பி.எஸ்.மணி மற்றும் என் அம்மா மோகினி மணி. என் சகோதரர் மற்றும் என் குடும்பத்தினர் அனைவரின் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி. நான் பல சமயங்களில் அதிகம் வெளியே வராமலும் பேசமாலும் இருக்கலாம். ஆனால் சினிமா மட்டுமல்ல மோட்டார் பந்தயத்திலும் முழு கவனம் செலுத்தி உங்களை மகிழ்விக்க தவறியது இல்லை. என் நிறை குறைகள் அனைத்தையும் இந்த 33 வருடங்கள் ஏற்றுக் கொண்டு என் மீது அன்பு வைத்து கொண்டாடியதற்கு நன்றி! உங்களுக்கும் எனக்கும் என்றென்றும் உண்மையாக இருக்க முயற்சிப்பேன் என் மோட்டார் ரேசிங் கரியருக்கும் உங்கள் அன்பும் ஆதரவும் தேவை. உங்களையும் நம் நாட்டையும் பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன். வாழு வாழ விடு என்று கூறி இருக்கிறார்.

தலைப்புகள்
#அஜித் கார் ரேஸ்#Ajith Kumar Statement#அஜித் அறிக்கை
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement