Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2024.10.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 3 நிமிடம்

அமரன் வரும் வேலையில் பாக்கிஸ்தான் ராணுவம் குறித்து சாய் பல்லவி பேசிய பழைய வீடியோ வைரல்

எழுதியவர்Rajkumar27 அக்டோபர், 2024 அன்று 02:40 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல நடிகை சாய் பல்லவி பாகிஸ்தான் ராணுவம் குறித்து பேசி இருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்தியா சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாய் பல்லவி. மலையாளத்தில் 'பிரேமம்' படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என கலக்கிக் கொண்டிருக்கிறார். சாய் பல்லவி தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' படத்தில் நடித்திருக்கிறார்.

🚨 @Sai_Pallavi92, who once compared our brave Indian Army to Pakistan’s and justified the suffering of Kashmiri Hindus, is now cast as Mata Sita?! This is an insult to our culture and our heroes! Let’s reject this mockery of our values. 🇮🇳❌ #BoycottSaiPallavi pic.twitter.com/kOIPLP5OyI

— 🕉️ 𝕄𝕒𝕕𝕙𝕦𝕊𝕍𝕠𝕚𝕔𝕖 🚩 (@MadhuSVoice) October 25, 2024

இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. மேலும், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் மேஜர் முகுந்த் வரதராஜன் வீர மரணம் அடைந்தார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த போராட்ட சம்பவங்கள், வீர செயல்கள், குடும்பம், மனைவி, குழந்தை ஆகியவற்றை வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

அமரன் படம்:

இதனால், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி முன்னிட்டு வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் பிரமோஷன் வேலைகளில் தான் பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி பாகிஸ்தான் ராணுவம் குறித்து பேசிய பழைய வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில், 'பாகிஸ்தானில் இருப்பவர்கள் எல்லாம் நம் இந்திய நாட்டு ஜவான்களை தீவிரவாதிகள் என்று தான் சொல்வார்கள்.

Killing a cow smuggler is the same as killing a Kashmiri Pandit” says actress Sai Pallavi. Comparing the targeted genocide of a community to the mafia trade of cow smuggling. She is playing Mata Sita role in an upcoming movie. pic.twitter.com/Bdta0mYTuv

— Professor Sahab (@ProfesorSahab) April 27, 2024

சாய் பல்லவி வீடியோ:

ஏனென்றால், நம்மை தாக்கும் ஒருவரை நாம் அப்படித்தான் சொல்லுகிறோம். அதனால், அவர்களை தாக்குபவர்களையும் அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் என்று கூறியுள்ளார். மேலும், 'தி காஷ்மீரி பைல்ஸ்' படத்தில் கூட காஷ்மீர் பண்டிதரை எப்படி அவர்கள் கொன்றார்கள் என்று காட்டினார்கள். இதை நீங்கள் மதச்சண்டையாக பார்த்தால், சமீபத்தில் கூட ஒருத்தர் தனது வண்டியில் மாட்டை வைத்துக்கொண்டு சென்றார். அவரைக் கூட சில நபர்கள் அடிக்கும்போது ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்கிறார்கள். அதனால், அப்போ நடந்த விஷயத்திற்கும் இந்த விஷயத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.

மதச் சண்டைகள் குறித்து சாய்பல்லவி:

நம்ம நல்ல மனிதர்களாக இருந்தால், மற்றவர்களை துன்புறுத்த மாட்டோம். நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக நீங்கள் ஒரு நல்ல மனிதரே இல்லை என்று தான் சொல்லுவேன். நீங்கள் ஒரு நல்ல மனிதனாக இருந்தால் எங்கிருந்தாலும் அங்கு நடுநிலையாகத்தான் இருப்பீர்கள் என்று பேசியுள்ளார். சாய் பல்லவியின் இந்த பழைய வீடியோ தான் தற்போது மீண்டும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. முக்கியமாக இந்தியன் ஜவான்களை சாய் பல்லவி தீவிரவாதி என்று குறிப்பிட்டதற்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

When the terrorists from Pakistan made multiple attacks on India in the past by invading into our territory, they were obviously brainwashed with the statement as shown in the trailer. One can understand that and that’s how they will think.

But the video clip of Sai Pallavi’s… pic.twitter.com/1ICGiWoZsB

— Raghu Rajaram (@RaghuTweetbook) October 25, 2024

நெட்டிசன்கள் கண்டனம்:

அதில் ஒருவர், கடந்த காலங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நமது எல்லைகளை ஊடுருவி இந்தியா மீது பல தாக்குதல்களை நடத்திய போது, அமரன் ட்ரெய்லரில் காட்டுவது போல அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர். ஒருவருக்கு எப்படி புரிகிறதோ, அப்படித்தான் அவர்கள் நினைப்பார்கள். ஆனால் சாய் பல்லவியின் பேச்சு, அதே உணர்வை பிரதிபலிப்பதாக காட்டுகிறது. அதுதான் சர்ச்சையை உருவாக்குகிறது. இந்தியாஎப்போதாவது மற்ற நாடுகளின் பகுதிக்கு ஊடுருவி இருக்கிறதா? பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இருந்து எல்லா முனைகளிலும் இந்தியா தனது எல்லைகளை காக்க வில்லையா? அப்படி என்றால், இந்திய ராணுவ வீரர்கள் ஏன் பயங்கரவாதிகளாகக் கருதப்படுகிறார்கள்?. இதை அமரன் பட குழு மட்டுமே தெளிவுபடுத்த முடியும் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்

தலைப்புகள்
#Amaran#அமரன்#சாய் பல்லவி#sai pallavi
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement