Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.07.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

திருமணமான ஓராண்டிலேயே கணவரை பிரிந்த சுகன்யாவிற்கு பிறந்த ஒரே மகள் - இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

S
எழுதியவர்Siva8 ஜூலை, 2022 அன்று 06:51 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இவர் சென்னையை சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் ஆர்த்தி தேவி. இயக்குனர் பாரதிராஜா தான் இவருக்கு சுகன்யா என்று பெயர் மாற்றம் செய்தார். இவர் தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு “புது நெல்லு புது நாத்து ” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சின்னகவுண்டர், கோட்டைவாசல், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், கருப்பு வெள்ளை, தாலாட்டு, கேப்டன், வண்டிச்சோலை சின்ராசு, மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ், மகாபிரபு, இந்தியன், சேனாபதி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

திருமணமான ஓராண்டிலேயே கணவரை பிரிந்த சுகன்யாவிற்கு பிறந்த ஒரே மகள் - இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

அதிலும் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இந்தியன் படத்தில் சுகன்யா வயதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் இவரை எல்லோரும் லேடி கமல் ஹாசன் என்று பெயர் வைத்து அழைத்திருந்தார்கள். மேலும், இவர் கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று பல முன்னனி நடிகர்களுடனும் நடித்து வந்தார். அதோடு இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார். நடிப்பையும் தாண்டி நடிகை சுகன்யாவிற்கு பரதநாட்டிய கலை மீது மிகுந்த ஆர்வமும் உண்டு.

இதையும் பாருங்க : 'சோழர்கள் வருகிறார்கள்' - நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இதோ.

சுகன்யாவின் திரைப்பயணம்:

தமிழ் சினிமாவில் பல முன்னனி நடிகர்களுடன் சுகன்யா நடித்திருந்தாலும், அவர் இதுவரை ரஜினியுடன் ஒரு படத்தில் கூட ஜோடி சேர்ந்து நடித்தது இல்லை. ஆனால், நீண்ட சேர்ந்து இடைவெளிக்கு பிறகு ரஜனி நடிக்கும் காலா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை சுகன்யா. மேலும், நடிகை சுகன்யா அவர்கள் திரைக்கு வருவதற்கு முன்பு பொதிகை தொலைக்காட்சியில் பெப்ஸி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார்.

Sukanya

சுகன்யாவின் சின்னத்திரை பயணம்:

அதன் பிறகு சன் டிவியில் அந்த நிகழ்ச்சியை உமா தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், சுகன்யாவின் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழாவிலும் பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். பின் இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தனது நடிப்புத் திறமைக்காக பல முறை பிலிம்பேர் விருதுகளை வாங்கியிருக்கிறார். இப்படி சினிமா உலகில் உச்சத்தில் இருந்த நடிகை சுகன்யா அவர்கள் ஒரு கட்டத்தில் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. பின் 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதரன் ராஜ கோபலன் என்பவரை சுகன்யா திருமணம் செய்து கொண்டார்.

சுகன்யா குடும்பம் பற்றிய தகவல்:

சுகன்யா அமெரிக்காவில் செட்டில் ஆனார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணமான ஓராண்டிலேயே சுகன்யா விவாகரத்து கோரி நீதி மன்றத்தை நாடினார். பின் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். தற்போது சுகன்யா தன் மகளுடன் இருக்கிறார். பெரும்பாலும் சுகன்யா இதுவரை எந்த ஒரு சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் அவரது மகளை அழைத்து சென்றது இல்லை. அவரை குறித்து எந்த செய்திகளும் வராமல் இருந்தது. சினிமாவின் சாயமே படாமல் சுகன்யா அவருடைய மகளை தனிப்பட்ட முறையில் வளர்த்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவருடைய தனிப்பட்ட தகவலை கூட இதுவரை வெளிப்படையாக சுகன்யா தெரிவதில்லை.

திருமணமான ஓராண்டிலேயே கணவரை பிரிந்த சுகன்யாவிற்கு பிறந்த ஒரே மகள் - இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

வைரலாகும் சுகன்யா மகளின் புகைப்படம்:

தற்போது சமீபத்தில் சுகன்யா தன் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்து பலரும் நடிகை சுகன்யாவின் மகளா இது! என்று நெட்டிசன்கள் கமெண்டுகளை போட்டு உள்ளார்கள். பொதுவாகவே தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் தங்களுடைய வாரிசுகளை வெளிப்படையாக மீடியாவிற்கு காட்டுவதில்லை. அந்த வரிசையில் சுகன்யாவும் ஒருவராக இருந்தார். ஆனால், சுகன்யா உடைய மகள் என்ன செய்கிறார்? சினிமாவில் நடிக்க விருப்பம் இருக்கிறதா? என்ற வேறு எந்த தகவலுமே தெரியவில்லை. இனிவரும் காலங்களில் சுகன்யா இது குறித்து சொல்வாரா? இல்லையா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

தலைப்புகள்
#sukanya#suganya#சுகன்யா#actress Sukanya#சுகன்யா மகள்
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement