Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.09.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஜய் எங்களிடம் சொன்னது இது தான் - மனம் திறக்கும் அனிதாவின் அண்ணன்

எழுதியவர்Tamil Selvam12 செப்டம்பர், 2017 அன்று 03:56 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
அனிதாவின் வீட்டுக்கு திடீரென வருகை தந்த நடிகர் விஜய், அனிதாவின் சகோதரரிடம், “இறந்தது என் தங்கை; அண்ணனிடம் எப்போது வேண்டுமானாலும் உதவி கேளுங்கள்” என்று கூறி அனைவரையும் நெகிழவைத்துள்ளார். vijayஅரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா. ப்ளஸ் டூ தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். 'டாக்டராக வேண்டும்' என்ற தனது கனவு நிறைவேறிவிட்டதாக எண்ணியிருந்த அனிதாவுக்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு தடையாக அமைந்தது. ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்திருந்த அனிதா, நீட் தேர்வில் 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனிடையே, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றம் வரை சென்றார் அனிதா. ஆனால், நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவக் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, அனிதாவின் மருத்துவக் கனவு கானல் நீரானது. மனஉளைச்சலில் இருந்த அனிதா கடந்த 1 ஆம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் திடீர் மரணம் தமிழக மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. Actor Vijayநீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக அனிதாவின் இறுதிச்சடங்கில் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். பலரும் அனிதாவின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய் குழுமூரில் உள்ள அனிதா வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்த அனிதாவின் தந்தை மற்றும் சகோதரர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். முக்கிய பிரமுகர்கள் எந்த இடத்துக்குச் சென்றாலும் சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். பின்னர் பாதுகாப்புக்கு மத்தியில், அந்தப் பிரமுகர்கள் செல்வார்கள். ஆனால், விஜயின் வருகை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கும் குறிப்பாக அனிதாவின் வீட்டாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. அனிதாவின் வீட்டுக்கு விஜய் திடீரென வந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் எங்களிடம் சொன்னது இது தான் - மனம் திறக்கும் அனிதாவின் அண்ணன்நடிகர் விஜய், அனிதாவின் குடும்பத்தாரிடம் என்ன பேசினார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, அனிதாவின் சகோதரர் மணிரத்னத்திடம் பேசினோம்... “எனது தங்கையின் இறப்பு எங்களை மிகவும் பாதித்துவிட்டது. வீடே மயானமாக காட்சியளிக்கிறது. காலை வழக்கம் போல் எழுந்தோம். நாங்கள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், நடிகர் விஜய் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் வாரிச்சுருட்டி எழுந்தோம். அதற்கு அவர், 'மெதுவா எழுந்திருங்க' என்று சொன்னார். நான் சேர் எடுக்கச் செல்ல முயன்றேன். அதற்கு அவர், 'உங்களைத்தான் பார்க்க வந்தேன்.மெதுவா வாங்க'னு சொன்னார். பின்பு எங்களோடு ஒண்ணா தரையில் அமர்ந்து பேசத்தொடங்கினார்.
தலைப்புகள்
#விஜய்#Vijay
எழுதியவர் குறிப்பு
Tamil Selvam

Tamil Selvam is a Political Writer at Behind Talkies with over four years of experience covering politics, governance, public policy, elections, and current affairs. He specializes in reporting and analyzing political developments, government initiatives, and issues that impact society. Through accurate and engaging journalism, he aims to provide readers with clear insights into the evolving political landscape and public affairs.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement