Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.12.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அண்ணாதுரை திரை விமர்சனம் !

A
எழுதியவர்Ajju1 டிசம்பர், 2017 அன்று 12:14 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
அண்ணன் அண்ணாதுரை மற்றும் தம்பி தம்பிதுரை என இரட்டை வேடங்களில் விஜய் ஆண்டனி. `தாடி வைத்திருந்தால் அண்ணன், ஷேவ் பண்ணியிருந்தால் தம்பி' எனும் அதே பழைய ஃபார்மட்டில் வந்துபோகிறார். இரண்டு கதாபாத்திரங்களும் இடையே முகத்தில் உள்ள முடியைத் தவிர, வேறு எந்த வித்தியாசத்தையும் விஜய் அண்ணன் காட்டவில்லை. அண்ணாதுரை திரை விமர்சனம் !வசன உச்சரிப்பு, உடல்மொழி போன்றவற்றிலும் முந்தைய படங்களில் என்ன செய்தாரோ, அதையே செய்திருக்கிறார். எந்த வித்தியாசமும் காட்டவில்லை. படத்தின் நாயகிகளாக வரும் மூவரில் டயானாவும், ஜுவல் மேரியும் விஜய் ஆண்டனியின் மூத்த அக்காவை போலவும், மகிமா கடைசி தங்கையைப் போலவும் இருக்கின்றனர். நாயகிகளின் பாத்திரத்தைவிட, திரையிலேயே தோன்றாத `எஸ்தர்' கதாபாத்திரம் மனதில் நிற்கின்றது. டபுள் ஹீரோக்களுக்கு ட்ர்பிள் வில்லன்கள். ராதாராவிக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் அவர் பெயரைவிட சிறியது. விஜய் ஆண்டனியின் அப்பாவாக நளினிகாந்த் நடித்திருக்கிறார். பயப்படவேண்டாம், அவர் பெயர் அப்பாதுரை இல்லை. விஜய் ஆண்டனியின் நண்பனாக காளிவெங்கட், தனக்கு கொடுக்கபட்ட கதாபாத்திரத்தில் குறையில்லாமல் நடித்திருக்கிறார். அண்ணாதுரை திரை விமர்சனம் !படத்திற்குள் உலாவிக் கொண்டிருக்கும் பத்து-பதினைந்து கதைகளையும் பிடித்து எசகுபிசகாக லின்க் அடித்ததில் எக்குதப்பாய் வந்திருக்கிறது திரைக்கதை. எங்கோ ஆரம்பித்து, எங்கெங்கேயோ செல்கிறது படம். திரைக்கதையில் நடக்கும் ஒவ்வொரு மாற்றத்திற்கும் எந்தவித அழுத்தமான காரணங்களும் சொல்லப்படவில்லை. ஒரு காட்சியில் அண்ணன் விஜய் ஆண்டனி, தம்பியைப் பற்றி ’அவன் சின்னப் பையண்டா. இன்னும் அவன் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கலை’ என பல வயது மூத்தவரைப் போல் பேசிக்கொண்டிருப்பார். இருவரும் இரட்டையர்கள் என்று படத்தில் குறிப்பிடுவார்கள். விஜய் ஆண்டனியின் அம்மா, அண்ணாதுரை கதாபாத்திரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது "நீங்க ரெட்டைப்பிள்ளையா இருந்தாலும் பிள்ளைனு நான் முதல்ல பார்த்தது அவனை தான்டா" என்று சொல்லுவார். இரட்டையர்களில் முதலில் பிறக்கும் குழந்தைதான் தம்பியாக முடியும். பின்னர் எப்படி அண்ணாதுரை அண்ணன் ஆனார்? ’இந்த ஊர் பழி சொல்லுமே தவிர வழி சொல்லாது’, ’நீ செத்துப்போனு சொன்னாலே செத்துப் போயிருவேன், போனு தானே சொல்ற... போறேன்’ என வசனங்களுக்காக மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர். ஆனால், படத்திற்கும் கதைக்கும் கதாபாத்திரக்கும் வசனங்கள் ஒட்டவேயில்லை. வட்டிக்காரரிடம் கையொப்பம் போட்டுக்கொடுத்த வெற்றுப் பத்திரத்தை எப்படி மறப்பார்கள், அண்ணாதுரை எதற்காக சம்பந்தேமேயில்லாமல் தம்பிதுரையை போல் மாறுகிறார், ஜூவல் மேரி என்ன ஆனார் என ஏகப்பட்ட கேள்விகள் தொக்கி நிற்கின்றன. அண்ணாதுரை திரை விமர்சனம் !வீண் அலப்பறைகள் ஏதும் இல்லாத ஒளிப்பதிவால், படத்திற்கு ப்ளஸ் மார்க் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தில்ராஜ். `ஈ.எம்.ஐ' பாடலில் வரும் விஷுவல் எஃபெக்ட்ஸும் கான்செப்டும் செம. விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையும் ஓ.கேதான். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இந்த படத்தின் நடிகர் மட்டுமல்ல, படத்தொகுப்பாளரும் கூட. பிசிறில்லாமல் தொகுத்திருக்கிறார். அதேபோல், படத்தை இரண்டு மணி நேரங்களாக சுருக்கியதற்கும் படத்தொகுப்பாளர் விஜய் ஆண்டனிக்கு கோடானக் கோடி நன்றிகள். குழப்பமான கதையும், அழுத்தமே இல்லாத திரைக்கதையும், ஸின்க் ஆகாத வசனங்களும் அண்ணாதுரையை மட்டுமல்ல, நம்மையும் படாதபாடு படுத்திவிடுகிறது.
தலைப்புகள்
#vijay antony#annadurai-movie-review#விஜய் அன்டனி#அண்ணாதுரை திரை விமர்சனம்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement