Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.03.23பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சமீபத்தில் சிறையில் இருந்து வந்த மீரா மிதுனுக்கு ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட் - இப்போ என்ன செய்துள்ளார் பாருங்க.

A
எழுதியவர்Ajju23 மார்ச், 2022 அன்று 07:50 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சமீபத்தில் ஜாமினில் வெளியான மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சோஷியல் மீடியாவின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை மீரா மிதுன். மீரா மிதுன் நடிகை மட்டும் இல்லாமல் மாடலும் ஆவார். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சை போட்டியாளராக திகழ்ந்து வந்த மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களை செய்து வந்தார்.

meera

பின் மீராமிதுன் அவர்கள் யூடியூப் வீடியோ மூலம் பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசியதற்கு மீரா மிதுன் மிது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல் துறையில் புகார் அளித்தனர்.இதனடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் மீரா மிதுனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின் இந்த வழக்கில் ஜாமீன் கோரி மீரா மிதுன் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், சமீபத்தில் தான் மீராமி துன் சிறையிலிருந்து வெளிவந்தார்.

ஜாமீனில் வெளியில் வந்த மீரா மிதுன் :

சிறையிலிருந்து வெளி வந்தவுடன் மீராமிதுன் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். அதில் அவர் கூறியது, நான் செய்த பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்து விட்டேன். கடவுளுக்கும், எல்லோருக்கும் நன்றி. என்னால் அம்மாவும், தம்பியும் ரொம்ப பாதிக்கப்பட்டார்கள். இனிமேலாவது நான் நல்ல பெயர் எடுக்கணும்.அதற்கான முயற்சிகளை நான் செய்து கொண்டிருக்கிறேன். மேலும், எதிர்காலத்தில் நான் மக்களோடு மக்களாக வாழ நினைக்கிறேன். தமிழ் திரையுலகினர் வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் நடிப்பேன். நான் இதற்கு முன்னாடி நடித்த படங்கள் எல்லாம் தற்போது ரிலீஸ் ஆகுற வேலைகளில் உள்ளது.

சமீபத்தில் சிறையில் இருந்து வந்த மீரா மிதுனுக்கு ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட் - இப்போ என்ன செய்துள்ளார் பாருங்க.

சிறையில் இருந்து வெளிவந்த பின் பேசிய மீரா :

இனிமேல் மக்களுக்கு பிடித்த மீரா மிதுன் ஆக என்னைப் பார்ப்பார்கள். நான் கைதாகும் போது என்ன நடந்தது? என்ன நடக்கிறது? என்று புரியாமல் இருந்தேன். நான் இனிமேல் கவனமாகவும், தெளிவாகவும் முடிவு எடுப்பேன். லாக்டவுன் சமயத்தில் நிறைய பிரச்சனைகள் வந்து விட்டது. நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என்பதை எனக்கு இந்த சமயத்தில் கடவுள் காட்டிக் கொடுத்துவிட்டார்.

திருந்திவிட்டதாக சொன்ன மீரா :

நான் இந்த மாதிரி எல்லாம் இருந்தது இல்லை. இந்த மாதிரிப் பொண்ணும் கிடையாது. நான் செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவித்து விட்டேன். நரகத்தை பார்த்து விட்டேன். அவரவர்கள் செய்ததை அவரஅவர்கள் அனுபவிப்பார்கள். முடிந்த அளவிற்கு நல்லது செய்யுங்கள், நல்ல பெயரை வாங்குங்கள்,நல்ல விஷயங்களை பேசுங்கள், நல்லவர்களுடன் இருங்கள். இதை நான் என்னுடைய வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை வைத்து சொல்கிறேன்.

meera

மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்

மீரா மிதுன் ஜாமினில் வெளிவந்த போதிலும், இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அவர் மீண்டும் சிறை செல்ல வாய்ப்பு இருக்கிறது.

தலைப்புகள்
#Bigg Boss Meera Mithun#Meera Mithun#Meera Mithun Warrent#மீரா மிதுன்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement