Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
சினேகன் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி பண மோசடி. கைது செய்ய வந்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்த பா.ஜ.க நடிகை ஜெயலட்சுமி.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.02.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சினேகன் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி பண மோசடி. கைது செய்ய வந்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்த பா.ஜ.க நடிகை ஜெயலட்சுமி.

எழுதியவர்subhashini20 பிப்ரவரி, 2024 அன்று 06:24 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சினேகன் பவுண்டேஷன் சர்ச்சை தொடர்பாக நடிகை ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சினேகன்-ஜெயலட்சுமி விவகாரம் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, தன்னுடைய பெயரை சொல்லி மோசடி நடப்பதாக சினேகன் அவர்கள் நடிகை ஜெயலட்சுமி மீது புகார் அளித்து இருந்தார். சினேகன் 2015 ஆம் ஆண்டில் இருந்து சினேகம் பவுண்டேஷன் நடத்தி வருகிறார். இது அவரின் சொந்தப் பணத்தின் மூலம் உருவாக்கியது. இதன் மூலம் இவர் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

சினேகன் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி பண மோசடி. கைது செய்ய வந்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்த பா.ஜ.க நடிகை ஜெயலட்சுமி.

அதற்கு இவர் முறையாக வருமான வரி செலுத்தி வருவதாகவும், அதற்கான ஆதாரங்களும் இருப்பதாகவும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தன்னுடைய பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்வதாக நடிகை ஜெயலட்சுமி மீது கமிஷன் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார் சினேகன். இதனை அடுத்து நடிகை ஜெயலட்சுமி கூறியது, நான் கடந்த 2018 ஆம் ஆண்டு முதலில் சினேகம் அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். அதன் மூலம் மக்களுக்கு உணவு, உடை உட்பட பல்வேறு சேவைகளை செய்து இருக்கிறேன்.

ஜெயலட்சுமி அளித்த புகார்:

கொரோனா காலத்திலும் மக்களுக்கு என்னுடைய சினேகம் அறக்கட்டளை மூலம் முடிந்த உதவிகளை செய்திருக்கிறேன். ஆனால், அவர் பெயரை நான் தவறாக பயன்படுத்தி பணம் பறிப்பதாக சினேகன் புகார் அளித்திருக்கிறார். இது முற்றிலும் பொய். என் பெயரை களங்கப்படுத்துவதற்காக அவர் இந்தக் குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினேகன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயலட்சுமி புகார் அளித்திருந்தார்.

சினேகன் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி பண மோசடி. கைது செய்ய வந்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்த பா.ஜ.க நடிகை ஜெயலட்சுமி.

சைபர் கிரைம் போலீசார் விசாரணை :

இப்படி இருவரும் மாறி மாறி புகார் அளித்தும், பேட்டி கொடுத்தும் இருந்தார்கள். இதன் பின் சினேகன் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது? மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி இருந்தது. அதன் பின் இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்திருந்தார்கள். ஆனால், சிநேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பின் தன்னை கைது செய்யக்கூடாது என்று சினேகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

ஜெயலட்சுமி கைது:

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சினேகனுக்கு முன்ஜாமின் வழங்க உத்தரவிட்டிருக்கிறது. இந்த விவகாரம் கடந்த சில மாதங்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் மோசடி மற்றும் போலியான ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து சென்னை திருமங்கலம் போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது.

View this post on Instagram

A post shared by Polimer News (@polimernews)

ஜெயலட்சுமி வீடியோ:

அதில் ஜெயலக்ஷ்மி, எல்லா போலீசும் என்னுடைய வீட்டில் சோதனை நடத்தினீர்கள். என்ன கிடைத்தது? எனக்கு எதிராக ஒரு சின்ன ஆதாரம் ஆவது கிடைத்ததா? போலியான ஆவணங்களை பயன்படுத்தி நான் பணம் வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. நான் எந்த தவறும் செய்யவில்லை. அதற்கு பிறகு எதற்கு என் மீது விசாரணை நடத்த வேண்டும். இருந்தாலும் விசாரணைக்கு நான் வருகிறேன். ஆனால், என்னுடைய வண்டியில் தான் நான் வருவேன். நீங்கள் நடந்து கொள்வது சரியில்லை என்று ஆவேசமாக பேசியிருக்கிறார். பின் ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.

தலைப்புகள்
#snegan foundation#பா ஜ க ஜெயலட்சுமி#சினேகன்#Snegan jayalakshmi#சினேகன் அறக்கட்டளை
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement