Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
'12 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த இந்த படமே' - மத கஜ ராஜாவுக்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்த ப்ளூ சட்டை
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.01.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'12 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த இந்த படமே' - மத கஜ ராஜாவுக்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்த ப்ளூ சட்டை

K
எழுதியவர்krithika13 ஜனவரி, 2025 அன்று 11:03 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

'மத கஜ ராஜா' படத்திற்கு பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்திருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.

'12 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த இந்த படமே' - மத கஜ ராஜாவுக்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்த ப்ளூ சட்டை

அது மட்டும் இல்லாமல் இந்த படம் 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனை ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சமீபத்தில் தான் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா படம் வெளியாக இருப்பதாக அறித்திருந்தார்கள். அதன்படி 12 வருடம் கழித்து நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இப்படம் வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் சிறு வயதிலிருந்தே விஷால், சந்தானம், சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா ஆகியோர் நண்பர்களாக இருக்கின்றனர்.

மத கஜ ராஜா கதை:

வெவ்வேறு ஊர்களில் வசிப்பவர்கள் ஒரு திருமணத்தில் மீண்டும் சந்திக்கும் போது தன் நண்பர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் உள்ளதை விஷால் அறிகிறார். முக்கியமாக சடகோபன் ரமேஷ் மற்றும் நிதின் சத்யா ஆகிய இருவரும் ஒரே நபரால் பாதிக்கப்பட்டு இருப்பதைத் தெரிந்து கொண்ட விஷால் அதை தீர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். அப்படி அவர்கள் என்ன பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்கள்? விஷால் தன் நண்பர்களுடன் இணைந்து அந்த பிரச்சனையை சரி செய்தாரா? என்பதுதான் படத்தின் கதை.

https://www.youtube.com/watch?v=PeHHMmohs3U

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:

இந்நிலையில், தற்போது பிரபல சினிமா விமர்சகர் மதகஜராஜா படத்திற்கு விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், 12 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த இந்த படமே நன்றாக இருக்கிறது. ஆனால், சமீபகாலமாக படங்கள் என்கிற பெயர்களில் பல குப்பை படங்களை எடுத்து வருகிறார்கள். படத்தில் இருக்கும் 60 சீனில் அனைத்து சீன்களுமா நல்லா இருக்கணும்னு ஆசைப்படுகிறோம். நறுக்கென ஒரு நாலு சீன் நல்லா இருந்தா போதுமே.

பாசிட்டிவ் விமர்சனம்:

அந்த நறுக்குன்னு 4 சீன் இந்தப் படத்தில் தாராளமாகவே இருக்கிறது. மேலும், வரலட்சுமி சரத்குமார் மற்றும் அஞ்சலி என 2 ஹீரோயின்களையும் எந்த அளவுக்கு கவர்ச்சியாக காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கிளாமராக சுந்தர் சி இந்த படத்தில் காட்டி இருக்கிறார். இந்தப் படத்தை குழந்தைகளுடன் பார்க்க வேண்டுமா? வேண்டாமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஓடிடியில் பல ஏ சான்றிதழ் படங்களை நடு வீட்டில் ஓடும் போது, இந்தப் படத்தை தாராளமாக தியேட்டரிலேயே பார்க்கலாம்.

'12 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த இந்த படமே' - மத கஜ ராஜாவுக்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்த ப்ளூ சட்டை

சந்தானம் குறித்து:

குறிப்பாக இந்த படத்தில் சந்தானத்தின் டைமிங் பஞ்ச் காமெடி எல்லாம் ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்கிறார்கள். இந்தப் படம் விஷால் படமா? இல்லை சந்தானம் படமா? என யோசிக்க வைக்கும் அளவுக்கு காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இந்தப் படம் நல்லா இருக்கு என்று சொல்ல காரணமே சந்தானத்தின் காமெடிதான். அதேபோல், விஜய் ஆண்டனி படங்களில் நடிக்காமல் இந்த படத்துக்கு போட்டதை போலவே பாடல்களை போட்டு இசையமைப்பாளராகவே இருந்திருக்கலாம் என்று பாராட்டியிருக்கிறார்.

தலைப்புகள்
#ப்ளூ சட்டை மாறன்#Madha Gaja Raja#மத கஜ ராஜா விமர்சனம்#Blue sattai maran#Madha Gaja Raja Review#மத கஜ ராஜா
எழுதியவர் குறிப்பு
K
krithika
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement