Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.04.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'அறை எண் 305-யில் கடவுள்'படத்தில் பிரகாஷ் ராஜுக்கு முன் இவர் தான் நடிப்பதாக இருந்ததாம். நல்ல வேல நடிக்கல.

எழுதியவர்Rajkumar19 ஏப்ரல், 2020 அன்று 05:48 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் சிம்பு தேவன். எப்போதும் புதிதாக ஒரு கதைக் களத்தில் தான் இவர் இயக்கிய படங்கள் இருக்கும். 2006-ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம் 'இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி'. இது தான் சிம்புதேவன் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படமாம். இதில் ஹீரோவாக 'வைகைப் புயல்' வடிவேலு நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் சிம்பு தேவன் இயக்கிய திரைப்படம் 'அறை எண் 305-யில் கடவுள்'.

Arai Enn 305-il Kadavul

2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி வெளி வந்த இந்த படத்தினை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'S பிக்சர்ஸ்' சார்பில் தயாரித்திருந்தார். இதில் கதையின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சந்தானம், கஞ்சா கருப்பு, பிரகாஷ் ராஜ், ஜோதிர் மயி, மதுமிதா, சம்பத் ராஜ், எம்.எஸ். பாஸ்கர், இளவரசு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இன்றோடு (ஏப்ரல் 18-ஆம் தேதி) இப்படம் வெளி வந்து 12 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆகையால் சமூக வலைத்தளமான ட்விட்டரில் '#12YearsOfAraiEn305ilKadavul' என்ற ஹேஸ் டேக் போட்டு ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, இது தொடர்பாக பேசிய இயக்குநர் சிம்பு தேவன், இதுவரை படம் குறித்து வெளி வராத ஒரு சுவாரஸ்ய தகவலை கூறியிருக்கிறார்.

இந்த படத்தில் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் ரொம்ப பவர்ஃபுல்லான ஒரு ரோலில் நடித்திருப்பார். அது தான் படத்தில் வலம் வரும் அந்த கடவுள் கதாபாத்திரம். பொதுவாக அதற்கு முன்பு வரை வந்த தமிழ் படங்களில், கடவுள் வருவார்.. படம் முடியும் வரை அவர் கடவுளாகவே தான் காட்டப்படுவார்.. ஆனால், இந்த 'அறை எண் 305-யில் கடவுள்' படத்தில் இயக்குநர் சிம்பு தேவன் அதை வித்தியாசமாக யோசித்து, அந்த கடவுள் மனிதனாக மாறி, இவ்வுலகத்தில் வாழும் மனிதன் படும் கஷ்டத்தை எதிர் கொண்டு வாழ்வது போல் அமைத்திருப்பார்.

Prakash Raj in Arai En 305il Kadavul

இந்த கேரக்டரில் பிரகாஷ் ராஜ் மிக அருமையாக நடித்திருப்பார். ஆனால், முதலில் இந்த கடவுள் ரோலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா? அவர் நம் மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான 'மெகா ஸ்டார்' மம்மூட்டியாம். அதன் பிறகு டிஸ்கஷனில் பிரகாஷ் ராஜின் பெயர் சொன்னதும், அவர் கச்சிதமாக பொருந்துவார் என்று நினைத்து இயக்குநர் சிம்பு தேவன் அவரை அணுகினாராம். ஆனால், பிரகாஷ் ராஜ், "நான் ஒரு வில்லன் நடிகர்.. என்னை கடவுள் ரோல்ல ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா?" என்று சிம்பு தேவனிடம் கேட்டாராம். "ரசிகர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள்" என்று கூறி சிம்பு தேவன் அவரை கமிட் செய்தாராம். அதன் பிறகு பிரகாஷ் ராஜ் மிகப் பெரிய சப்போர்ட்டாக இருந்து அந்த கேரக்டரில் சூப்பராக நடித்துக் கொடுத்தார் என்று இயக்குநர் சிம்பு தேவன் தெரிவித்திருக்கிறார்.

தலைப்புகள்
#பிரகாஷ் ராஜ்#Prakash Raj#அறை எண் 305-யில் கடவுள்#Arai Enn 305-il Kadavul#Chimbu Deven
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement