Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
C1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.06.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'மகாராஜா' திரைப்படத்தை புறக்கணித்த பாடகி சின்மயி - காரணம் யார் தெரியுமா?

எழுதியவர்Rajkumar28 ஜூன், 2024 அன்று 04:45 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல பாடகி சின்மயி 'மகாராஜா' படத்தை புறக்கணித்து இருக்கும் செய்திதான் இப்போது வைரலாகி வருகிறது. தென்னிந்தியா சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்ந்தவர் சின்மயி. இவர் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒரு தெய்வம் தந்த பூவே' என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

'மகாராஜா' திரைப்படத்தை புறக்கணித்த பாடகி சின்மயி - காரணம் யார் தெரியுமா?

இப்படி ஒரு நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும், வைரமுத்துக்கும் இடையே பனிப்போரே ஏற்பட்டது. அதேபோல் சின்மயிக்கு ஆதரவாகவும் எதிராகவும் அனைவரும் கருத்து தெரிவித்திருந்தார்கள். தற்போது மீண்டும் வைரமுத்துவை பற்றி சின்மயின் பதிவு தான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சின்மயி பதிவு:

தனது சமூக வலைதளத்தில் சின்மயி, 'பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் தொல்லை குறித்து பேசும் படமான 'மகாராஜா'வில் வைரமுத்து பாடல் எழுதியுள்ளார் என்பதை அறிந்ததும் வருத்தப்பட்டேன். சிலருக்கு பிடித்தமான ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர் என்று உண்மையை சொன்னதால், சொன்னவரையே வேலை செய்யவிடாமல் தடை செய்வது தமிழ் சினிமா துறையாக மட்டும்தான் இருக்கும். அதனால் நான் அந்தப் படத்தை பார்க்க போவதில்லை. மேலும் அப்படத்தைப் பார்த்து கருத்துக்களை கூறியதற்காக பத்திரிக்கையாளர்களை துன்புறுத்தியதாக கேள்விப்பட்டேன்.

I sadly, just got to know Vairamuthu wrote the lyrics in Maharaja - a film that talks about rape and sexual abuse.

The Tamil Industry is the ONLY one in the WORLD to actually ban someone from working because I named their favourite molester.

I dont think I am going to watch…

— Chinmayi Sripaada (@Chinmayi) June 25, 2024

குற்றவாளிகள் தண்டனை அனுபவிப்பார்கள்:

மேலும், தமிழ் சினிமாவில் உள்ள சக்தி வாய்ந்தவர்கள் சிறப்பாக செய்வார்கள் என்றும், சரியானதை செய்வார்கள் என்றும் நான் நம்புகிறேன். ஆனால், அந்த நம்பிக்கைக்கு மீண்டும் மீண்டும் ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சுகிறது. ஒரு கட்டத்தில் அது பழி வாங்கும் அளவிற்கு செல்கிறது என்பதை உணரும் போது நான் ஆச்சரியப்படுகிறேன். பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமைகள் செய்பவர்கள் மற்றும் அவர்களை ஊக்குவிக்கும் ஒவ்வொருவருக்கும் பல மடங்கு அதற்கான பலனை அனுபவிப்பார்கள்' என்று ஆக்ரோஷமாக பதிவிட்டுள்ளார்.

மகாராஜா படம்:

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது படமாக 'மகாராஜா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பெண் பிள்ளைகளுக்கு எதிராக இந்த சமுதாயத்தில் நிகழ்ந்து வரும் பாலியல் வன்கொடுமையை சொன்னதே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, அனுராதா காஷ்யப், மம்தா மோகன் தாஸ், அபிராமி, பாரதிராஜா, நட்டி, சிங்கம் புலி, முனிஷ்காந்த், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

'மகாராஜா' திரைப்படத்தை புறக்கணித்த பாடகி சின்மயி - காரணம் யார் தெரியுமா?

படத்தின் வெற்றிக்கு காரணம்:

மேலும் இப்படத்திற்கு அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார் மற்றும் பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சாதனை படைத்து பலரின் பாராட்டுகளையும் பெற்று பிளாக்பஸ்டர் படமாக ஓடிக்கொண்டிருக்கிறது மகாராஜா. படத்தின் திரைக்கதை, சஸ்பென்ஸ், திடீர் திருப்பம், ஆக்சன் காட்சிகள் என ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துஉள்ளது. அதனால், படம் வெளியாகி வாரங்கள் கடந்தும் திரையரங்குகளில் மக்களின் அலை ஓயவில்லை என்று சொல்லலாம்.

தலைப்புகள்
#Vairamuthu Chinmayi#சின்மயி##சின்மயி#chinmayi alligation#சின்மயி வைரமுத்து#Maharaja
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement