Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
S2 14
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.10.31பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'80 வயசு ஆச்சு டயலாக் மறந்தா திட்டுவாங்க'- பிரபல காமெடி நடிகர் மேனேஜர் சீனா பேட்டி

K
எழுதியவர்krithika31 அக்டோபர், 2024 அன்று 08:21 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பழம்பெரும் நடிகர் சீனிவாச அய்யரின் பழைய பேட்டி வீடியோ தான் சோசியல் மீடியாவில் மீண்டும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பழம்பெரும் நடிகராக இருந்தவர் சீனிவாச அய்யர். இவரை மேனேஜர் சீனா என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும். இவர் நாடகத் துறையின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். முதலில் இவர் பி அண்ட் சி மில்லில் 28 ஆண்டுகளாக சூப்பர்வைசராக பணியாற்றி இருந்தார். அப்போது தான் இவருக்கு நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு இவர் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நடித்தார். பின் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு வந்தது.

'80 வயசு ஆச்சு டயலாக் மறந்தா திட்டுவாங்க'- பிரபல காமெடி நடிகர் மேனேஜர் சீனா பேட்டி

இவர் 1975 ஆம் ஆண்டில் நடிகர் வி கோபாலகிருஷ்ணனின் 'ராஜயோகம்' என்ற நாடகத்தில் மேனேஜர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தின் மூலம் இவர் பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டார். அன்றிலிருந்து தான் இவருக்கு மேனேஜர் சீனா என்ற பெயர் வந்தது. அதற்கு பிறகு இவர் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். இவர் இதுவரை 3800-க்கும் மேற்பட்ட நாடகங்கள், 80க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார்.

மேனேஜர் சீனா திரைப்பயணம்:

இவருடைய நாடகங்கள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளிலும் நடந்திருக்கிறது. மேலும், இவருடைய நடிப்பிற்காக பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார். 30 வருடங்களுக்கும் மேலாக இவர் சினிமா, நாடகத்தில் நடித்து இருக்கிறார். தற்போது இவருக்கு 80 வயதிற்கு மேல் ஆகிவிட்டது. வயது மூப்பின் காரணமாக இவர் படங்களிலிருந்து நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இவருடைய மனைவி சமீபத்தில் தான் இறந்தார்.

https://www.youtube.com/watch?v=9_kf2aRGBrY

மேனேஜர் சீனா குறித்த தகவல்:

தற்போது இவர் தன்னுடைய ஒரே ஒரு மகனுடன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக வீடு இருக்கிறது. ரொம்ப எளிமையானவர். படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஆட்டோ, படத்தில் பஸ்ஸில், ரயிலில் தான் செல்வார். அது மட்டும் இல்லாமல் இவர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரும் ஆவார். பின் இவர் கூடைப்பந்து விளையாட்டு வீரராகவும் இருக்கிறார். தற்போது இவர் தன்னுடைய கடைசி காலத்தை மகனுடன் கழித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் மேனேஜர் சீனா பேட்டி அளித்திருக்கிறார்.

மேனேஜர் சீனா பேட்டி:

அதில் அவர், நான் முதல் முதலாக நடித்த நாடகத்தில் மேனேஜர் கதாபாத்திரத்தில் நடித்தேன். அப்போதிலிருந்து தான் மேனேஜர் சீனா என்ற பெயர் வந்தது. என்னுடைய பெயர் சீனிவாசன். மேடை நாடகங்கள் மூலம் தான் எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நிறைய நாடங்களில் நடித்திருக்கிறேன். இந்தியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் நாடகங்களில் நடித்திருக்கிறேன். படங்களில் வாய்ப்புகள் வருகிறது. ஆனால், நான் நடிக்கவில்லை. காரணம் வயதாகிவிட்டது. டயலாக் எல்லாம் மனப்பாடம் செய்து சொல்ல முடியாது. அப்படி நம்ம சொல்லும்போது ஏதாவது தவறு நடந்துவிட்டால் திட்டி விடுவார்கள்.

https://www.youtube.com/watch?v=a5CvdcpVTV0

யாரிடமும் கை நீட்ட மாட்டேன்:

என்னடா இவன் இப்படி பண்ணுறான், இவன் சீனியர் நடிகனா என்று சொல்லி விடுவார்கள். அதனால் தான் எதற்கு என்று நான் நடிப்பதை நிறுத்தி விட்டேன். இப்போது நான் என்னுடைய ஒரே ஒரு மகனுடன் தான் வசித்து வருகிறேன். என்னுடைய தேவைக்கு தேவையானபணத்தை நான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அக்கவுண்டில் சேர்த்து வைத்திருக்கிறேன். யாரிடமும் கைநீட்டி ஒரு ரூபாய் வாங்கும் நிலையில் நான் இல்லை. என் மகனிடமே எனக்கு செலவுக்கு கொடு என்று கேட்க மாட்டேன். ஆண்டவன் என்னை நன்றாக தான் வைத்திருக்கிறான். இவ்வளவு வயதிலும் என்னை ஆரோக்கியமாக தான் வைத்திருக்கிறான். கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் என்று பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

தலைப்புகள்
#Manager Cheena#மேனேஜர் சீனா#சீனிவாச அய்யர்
எழுதியவர் குறிப்பு
K
krithika
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement