Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நீங்கள்தான் உண்மையான நண்பன்..! உங்களுக்கு சல்யூட்..! கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்.!

A
எழுதியவர்Ajju18 ஆகஸ்ட், 2018 அன்று 04:54 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அவசரக் கமிட்டி அமைத்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீஃபாவின் உதவியைக் `கேரள மக்கள் மறக்கமாட்டார்கள்' என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நீங்கள்தான் உண்மையான நண்பன்..! உங்களுக்கு சல்யூட்..! கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்.! எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடு, நிலச்சரிவு என இயற்கை பேரிடரின் கோரப்பிடியில் கடவுளின் தேசமான கேரளம் சிக்கியுள்ளது. ஆண்டுதோறும் பெய்யும் தென்மேற்குப் பருவமழையால் சந்தோஷமடையும் கேரள மக்கள் இந்த ஆண்டு பெய்துள்ள பருவமழையால் துயரத்தைச் சந்தித்துள்ளனர். வெள்ளம், நீரில் மிதக்கும் வீடுகள், படகுகளின் மூலம் மீட்கப்படும் மக்கள் என இதுதொடர்பான செய்திகள்தான் கடந்த இரண்டு வாரகாலமாக செய்திஊடகங்களையும், இணையங்களையும் சுற்றிவருகிறது. தற்போது வரைக்கும் கனமழையால் பலியானோர் எண்ணிக்கையோ 324-ஐ தொட்டிருக்கிறது. மழை நின்ற பிறகுதான் சேதப் பணிகளை முழுமையாகக் கணக்கெடுக்க முடியும். அப்போது முழுநிலவரமும் வெளிவரும். நிவாரணப் பணிகளை மாநில அரசும், மத்திய அரசும் முடுக்கிவிட்டுள்ளன. அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் என அனைவரும் களத்தில் நேரடியாக இறங்கியுள்ளனர். இயற்கையின் இந்தக் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்பட்டுள்ள அந்த மக்களுக்குத் தேவையான மருந்துகள், உணவுகள் போன்ற அடிப்படைப் பொருள்களை அனுப்பும் பணியில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், திரைப்படப் பிரபலங்கள் களம் இறங்கியுள்ளனர். இவர்களுடன் தற்போது கேரள மக்கள் அதிகம் வசிக்கும் ஐக்கிய அரபு அமீரகமும் கைகோத்துள்ளது. flood kerala அவர்களுக்கு உதவும் விதமாக ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீஃபா உத்தரவில் அவசரக் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தேசிய அவசரக் குழு என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கமிட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய உள்ளது என்றும் அனைவரும் மனிதாபிமான அடிப்படையில் கேரளாவுக்கு உதவ வேண்டும் எனவும் ஐக்கிய அரபு அமீரகம் பிரதமர் ஹெச்ஹெச் சேக் முகமது வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், ``கேரள மக்கள் எப்போதும் எங்களுடன் இருக்கிறார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றியில் அவர்களுக்கும் பங்கு இருக்கிறது. அவர்களுக்கு இந்த நாள்களில் உதவ வேண்டும் என்ற பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது'' என்று குறிப்பிட்டு அதை ஆங்கிலம், மலையாளம், அரபிக் என மூன்று மொழிகளிலும் ட்விட்டரில் பதிவிட்டார். நீங்கள்தான் உண்மையான நண்பன்..! உங்களுக்கு சல்யூட்..! கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்.! அமீரக அதிபரின் மனித நேயத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ``உங்களது அக்கறை, தாராள மனப்பான்மை மற்றும் பெரிய இதயத்துக்கு நன்றி. தேவைப்படும் நேரத்தில் அளித்துள்ள இந்த உதவியை கேரள மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். இந்த நேரத்தில் அளித்துள்ள உதவி கேரளாவின் உண்மையான நண்பன் நீங்கள் என்பதைக் காட்டுகிறது. இதற்காக என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு ஒரு சல்யூட்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தலைப்புகள்
#கேரளா#kerala#Flood
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement