Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Sa 3
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2026.03.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவாக சந்தோஷ் நாராயணன், தீ பாடிய பாடல் வெளியீடு

எழுதியவர்subhashini9 மார்ச், 2026 அன்று 07:04 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், கான்ஷியஸ் பிளானட் இசைத் தொகுப்பின் முதல் பாடலை சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாடகி தீ, திவா சாவேஜ் (Tiwa Savage), இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் வொண்டாகர்ள் (WondaGurl) ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். “ஏன்சியண்ட் சீட்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்பாடல் நேற்று (மார்ச் 6) வெளியிடப்பட்டது.

சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவாக சந்தோஷ் நாராயணன், தீ பாடிய பாடல் வெளியீடு

விவசாய நிலங்களில் மண் வளத்திற்கு ஆதாரமாக விளங்கும் அங்கக கரிமத்தை அதிகரிக்க வேண்டிய அவசியத்தையும், எதிர்கால சந்ததியினருக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் வலியுறுத்தும் வகையில் ‘கான்ஷியஸ் பிளானட் இசைத் தொகுப்பு’ உருவாக்கப்பட்டு வருகிறது. இசை எனும் வலிமையான ஊடகத்தின் வாயிலாக, மண்ணைப் பாதுகாப்பதன் அவசியத்தை உலகிற்கு எடுத்துரைப்பதே இந்த இசைத்தொகுப்பின் முக்கிய நோக்கமாகும். “ஏன்சியண்ட் சீட்” பாடல், பாடகி தீ-யின் உணர்வுப்பூர்வமான குரலும், சந்தோஷ் நாராயணனின் தனித்துவமான இசை அமைப்பும் இணைந்து மண்ணுக்கும் மனிதனுக்குமான ஆழமான பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஈஷா அறக்கட்டளை:

இந்தப் பாடல் குறித்து பாடகி தீ கூறுகையில், "மண் என்பது வாழ்வின் அடிப்படை. அங்குதான் வாழ்வு தொடங்குகிறது, முடிகிறது, மீண்டும் உயிர்த்தெழுகிறது. மண்ணைப் பாதுகாப்பது என்பது உயிரையே பாதுகாப்பதற்குச் சமம். நாம் செய்யும் அனைத்தும் இறுதியில் மண், சூரியன் மற்றும் நீர் ஆகியவற்றிலிருந்தே உருவாகின்றன. உலகளாவிய அளவில் அழிந்து வரும் மண் வளம் தொடர்பான நெருக்கடியான சூழல் குறித்து, மண் காப்போம் இயக்கம் மூலம் சத்குரு ஏற்படுத்திய விழிப்புணர்வுக்கு பிறகே எனக்குப் புரிந்தது.

https://www.youtube.com/watch?v=MJA9B0qEURs&t=1s

மண் காப்போம் பாடல்:

ஆகையால் என்னால் முடிந்த எந்த வகையிலாவது இந்த இயக்கத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேன். இது வெறும் இசை அல்லது பாடலோடு மட்டும் நின்றுவிடக்கூடாது. என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்ய ஆசைப்படுகிறேன். ஆனால் இப்படி ஒரு பாடலோடு இதனைத் தொடங்குவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது," என்று தெரிவித்தார். உலகளவில் அழிந்து வரும் மண்ணின் வளத்தை மீட்டெடுக்க 2022-ஆம் ஆண்டு சத்குருவால் ‘மண் காப்போம்’ இயக்கம் தொடங்கப்பட்டது.

சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவாக சந்தோஷ் நாராயணன், தீ பாடிய பாடல் வெளியீடு

பாடல் குறித்த தகவல்:

ஒரு வளமான மண்ணில் குறைந்தபட்சம் 3% முதல் 6% வரை அங்கக கரிமம் இருக்க வேண்டும். ஆனால் உலகின் பல பகுதிகளில் இது 1%-க்கும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக இந்தியாவின் 62% மண்ணில் 0.5%-க்கும் குறைவான அங்கக கரிமமே உள்ளது. இது உணவுப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இந்த இக்கட்டான சூழலை உலகத் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல சத்குரு 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள இந்த முதல் பாடல், அனைத்து முன்னணி இசைத் தளங்களிலும் உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தலைப்புகள்
#santhosh narayanan#சத்குரு#சந்தோஷ் நாராயணன்#Save Soil Movement
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement