Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.01.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

என்னை யார் என்று கேட்டு சட்டையை பிடித்து வெளியே தள்ளினார். மேடையில் புலம்பிய பாரதி ராஜா.

எழுதியவர்subhashini30 ஜனவரி, 2020 அன்று 10:39 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் சந்தானம். தற்போது நடிகர் சந்தானம் நடிப்பில் "டகால்டி மற்றும் சர்வர் சுந்தரம்" ஆகிய இரு படங்களும் உருவாகியுள்ளது. இந்த இரண்டு படத்தையும் ஒரே நாளில் அதாவது ஜனவரி 31 ஆம் தேதி வெளியிடுவதாக தகவல் வந்தது. இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு படத்தின் விளம்பரங்களை செய்து கொண்டு வந்தனர். ஒரே நடிகரின் இரண்டு படங்கள் அதுவும் ஒரே நாளில் வெளியானால் சினிமாவில் வசூல் பாதிக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

என்னை யார் என்று கேட்டு சட்டையை பிடித்து வெளியே தள்ளினார். மேடையில் புலம்பிய பாரதி ராஜா.

இதனையடுத்து டகால்டி மற்றும் சர்வர் சுந்தரம் படத்தின் தயாரிப்பாளர்கள் இடையே மோதல்கள் நடந்தது. பின் இவர்கள் இருவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்கள். இந்நிலையில் இவ்விரு படக் குழுவினரை அழைத்து தயாரிப்பாளர் சங்கத்தின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பெப்சி சிவா, தயாரிப்பாளர் ராஜன், சர்வர் சுந்தரம் பட தயாரிப்பாளர் செல்வக்குமார் மற்றும் டகால்டி பட தயாரிப்பாளர் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒருவழியாக இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் சமாதானத்துக்கு வந்தார்கள். தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா அவர்களின் அறிவுரைப்படி 'டகால்டி' படம் 31ஆம் தேதி வெளிவருகிறது. சர்வர் சுந்தரம் படம் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளிவரும் என்று கூறினார்கள். இந்த முடிவுக்கு இரு தயாரிப்பாளர்களும் ஒத்துக் கொண்டார்கள். அதுமட்டுமில்லாமல் யாருடைய படத்தையும் இந்த தேதியில் வெளியிடுங்கள் என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை. ஆனால், சினிமாவில் பிரச்சனை நிகழ கூடாது என்பதற்காக தான் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=QNTfiOPL4YI

அப்போது பாரதிராஜா அவர்கள் கூறியது, பாரதிராஜா என்பவன் இத்தனை வருடங்கள் சினிமா துறையில் நான் சம்பாதித்த பெயர். இந்த பெயருக்கு மதிப்புக் கொடுத்து இவ்விரு படத்தின் தயாரிப்பாளர்களும் சமரசம் ஆனது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சர்வர் சுந்தரம் படத்திற்கும் எனக்கும் ஒரு ஏமோஷனல் கனெக்சன் இருக்கிறது என்று சொல்லலாம். தற்போது நீங்கள் பார்க்கும் பாரதிராஜா வேறு, அப்போ,
நாகேஷின் சர்வர் சுந்தரம் படம் வெளியாவதற்கு முன்பே விநியோகஸ்தர்களுக்கு படம் போட்டு காட்டுவதற்கு ஏவிஎம்க்கு அழைத்துச் சென்றார்கள். சாதாரணமாக ஏவிஎம் உள்ளே செல்ல முடியாது. ஆனால், நான் அந்த படத்தை பார்க்க மீடியேட்டர் உடன் சென்றதால் உள்ளே செல்ல முடிந்தது.

நான் வெளியிடாத நாகேஷ் சார் படத்தை பார்க்க போகிறேன் என்று குஷியில் உட்கார்ந்து இருந்தேன். அப்போது ஒருவர் யார் நீங்கள் என்று கேட்டார்கள். நான் இவருடன் வந்திருக்கிறேன் என்று நான் சொன்னேன். என்னை அழைத்து வந்தவன் அவர்களை பார்த்து பயந்து கொண்டு என்னை யாரென்று தெரியாது என்று சொல்லிவிட்டார். உடனடியாக அந்த மேனேஜர் என் சட்டையை பிடித்து இழுத்து ஏவிஎம் வாசலில் வெளியே விரட்டினார். அப்போது சேலஞ்சை செய்தேன். ஒருநாள் மிகப்பெரிய நடிகராகவோ, இயக்குனராகவோ இந்த ஏ வி எம்க்கு வருவேன். பின் அதே நிறுவனம் புதுமைப் பெண் என்ற படத்தை இயக்க என்னை அழைத்தது. இதை நான் சரவணன் இடமே சொல்லி இருக்கிறேன் என்று கூறினார்.

தலைப்புகள்
#இயக்குனர் பாரதிராஜா#director bharathiraja#actor santhanam#நடிகர் சந்தானம்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement