Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
V1 3
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.12.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பார்ட் 1க்கு முன்னாடி பார்ட் 2 எடுக்க காரணம் இதுதான் - 'வீர தீர சூரன்' இயக்குனர் சொன்ன சீக்ரெட்

K
எழுதியவர்krithika11 டிசம்பர், 2024 அன்று 05:39 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

'வீர தீர சூரன்' படம் குறித்து இயக்குனர் கூறியிருக்கும் சுவாரசியமான தகவல்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சியான் விக்ரம். கடைசியாக நடிகர் விக்ரம் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கேஜிஎஃப் இல் இருந்த பூர்வ குடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருந்தது.

பார்ட் 1க்கு முன்னாடி பார்ட் 2 எடுக்க காரணம் இதுதான் - 'வீர தீர சூரன்' இயக்குனர் சொன்ன சீக்ரெட்

இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்கிரோன் என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போது விக்ரம் அவர்கள் 'வீர தீர சூரன்- பார்ட் 2' என்னும் படத்தில் நடித்திருக்கிறார்.

வீர தீர சூரன்:

இப்படத்தை முன்னணி நட்சத்திர இயக்குனரான எஸ். யூ. அருண்குமார் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து, எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன், சித்திக் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=uxVyf47UllA

படம் குறித்த தகவல்:

ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்திருக்கிறார். தற்போது 'வீரதீர சூரன் பார்ட் 2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த திரைப்படம் வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் என கூறப்படுகிறது.

பார்ட் 2 முதலில் ஏன்:

இந்நிலையில் படத்தின் இயக்குனர் எஸ்.யூ .அருண்குமார், பார்ட் 1 எடுப்பதற்கு முன் பார்ட் 2 எடுத்ததற்கான காரணத்தை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், 'ரொம்ப கம்மியான காட்சிகளை வைத்து தான் பண்ணனும். 60, 62 சீன் எல்லாம் பண்ண கூடாது. 10 சீன், 15 சீன்தான் தான் இருக்கணும் படத்துல என்று பண்ண படம் தான் 'வீர தீர சூரன்'. படத்தோட நீளத்துக்கும் இதற்கும் சம்மந்தமும் எல்லை. ஒவ்வொரு காட்சியும் 5-7 நிமிடங்கள் என்று இருக்கும். நம்ம சினிமாவுக்கு வரும்போது நிறைய விஷயம் சொல்லி சொல்லி அனுப்புவாங்க ஒரு படத்துல 62 சீன் இருக்கணும்.

https://www.youtube.com/shorts/ae92KxXTjZk

இயக்குனர் சொன்ன சீக்ரெட்:

ஸ்கிரிப்ட் என்றால் 120 பக்கம் இருக்க வேண்டும், 3- act Structure குள்ள வரணும் இல்லன்னா 15 Beat sheet குள்ள வரணும் இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் சொல்லுவாங்க. அப்புறமா நம்ம பிராக்டிகலா எக்ஸ்பிரியன்ஸ் பண்ணா இதெல்லாம் தேவையில்லை என்று தோணும். அதை பிரேக் பண்ண வேண்டும் என்று தோணுச்சு. அதுதான் 'வீர தீர சூரன் பார்ட் 2'. ஏனென்றால், இந்தப் படம் பட்டுனு ஆரம்பிச்சிடும். ஒரு மோதலோடு ஆரம்பிக்கும். அதனால் கண்டிப்பாக முன்னாடி ஒரு கதை இருக்கிறது. அதுதான் பார்ட் 1. அதனால் பார்ட் 1 வரும், ஆனால் இப்ப பார்ட் 2 தான் எடுத்து இருக்கோம் என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#எஸ் யு அருண் குமார்#Veera Dheera Sooran Part 2#Veera Dheera Sooran#S U Arun Kumar#actor vikram#வீர தீர சூரன் 2#விக்ரம்
எழுதியவர் குறிப்பு
K
krithika
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement