Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
சிவகார்த்திகேயன் பிரச்சனைக்கு ஏன் முற்றுப்புள்ளி வைக்கல - செய்தியாளர் கேள்விக்கு இமான் பதில்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.11.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சிவகார்த்திகேயன் பிரச்சனைக்கு ஏன் முற்றுப்புள்ளி வைக்கல - செய்தியாளர் கேள்விக்கு இமான் பதில்.

A
எழுதியவர்Arun1 நவம்பர், 2023 அன்று 02:07 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சமீபத்தில் சிவகார்த்திகேயன் குறித்து இமான் பேசி இருந்த விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது இதுகுறித்து மீண்டும் பேசி இருக்கிறார் இமான். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பேசிய இமானிடம் சிவகார்த்திகேயன் படங்களுக்கு ஏன் இசையமைப்பது இல்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த இமான் ' மனம் கொத்தி பறவை படத்தில் தான் எங்களுடைய பயணம் ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, எங்கள் வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்களுக்கு நான் இசையமைத்து இருக்கிறேன்.

https://twitter.com/Chrissuccess/status/1713958709901005055

அதுமட்டுமில்லாமல் அவர் முதன்முறையாக என்னுடைய இசையில் தான் பாடினார். ஆனால், இனி அவருடன் நான் பயணிக்க போவதில்லை.இந்த ஜென்மத்தில் இனி சேர்ந்து நாங்கள் பயணம் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம். காரணம், எனக்கு சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார். அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது. இதை குறித்து நான் அவரிடமும் நேரடியாகவே கேட்டு விட்டேன்.

அதற்கு அவர் சொன்ன பதிலை இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது. பல விஷயங்களை மூடி மறைத்து தான் ஆக வேண்டும். அந்த வலியும் வேதனையும் எனக்கு அதிகமாகவே இருந்தது என்று கூறி இருந்தார். இந்த விவகாரம் குறித்து பலர் சமூக வலைத்தளத்தில் பல சர்ச்சைகளை கிளப்பிய நிலையில் இமான் தன் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததற்கு காரணம் சிவகார்த்திகேயன் என்றும் கூறி வருகிறார்கள்.

https://youtu.be/7P3s6yekQ-4

சிவகார்த்திகேயன் இதுவரை எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் இமான் சமீபத்தில் பட நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது பத்திரிகையாளர் ஒருவர் 'உங்களைப் பற்றி சமூக வலைதளத்தில் சரியாகவும் பேசுகிறார்கள் தவறாகவும் பேசுகிறார்கள். ஆனால் இது குறித்து நீங்கள் எந்த முற்றுப்புள்ளியும் வைக்கவில்லை. சிவகார்த்திகேயனுடன் அப்படி என்னதான் பிரச்சனை? ஏன் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த இமான் 'முற்றுப்புள்ளி வைக்க முடியாது. அதனை இறைவன் பார்த்துக் கொள்வான். இறைவனுக்கு மனிதர்களை தாண்டி எது சரி என்பது தெரியும். எனவே, இறைவன் இதற்கு எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என்று நம்புகிறேன்' என்று கூறி இருந்தார். ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து பேசிய இமானின் முன்னாள் மனைவி மோனிகா 'சிவகார்த்திகேயன் ரொம்ப டீசன்டான மனிதர். இமானுக்கும் அவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. நண்பர் என்ற அடிப்படையில் எங்கள் குடும்பத்தின் மேல் சிவகார்த்திகேயன் அக்கரையாக இருப்பார்.

சிவகார்த்திகேயன் பிரச்சனைக்கு ஏன் முற்றுப்புள்ளி வைக்கல - செய்தியாளர் கேள்விக்கு இமான் பதில்.

இமானோட விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் செய்யவில்லை. அது இமானுக்கு பிடிக்கவில்லை. சிவகார்த்திகேயன் தனக்கு சப்போர்ட் பண்ணவில்லை என்று தான் இமான் துரோகம் செய்தாரு என்று சொன்னது எனக்கு புரியுது. ஆனால், அதை வெளியில் வேற மாதிரி புரிஞ்சுகிறார்கள். பொதுவாக குடும்ப நண்பர்கள் இருந்தால் நண்பரோட குடும்பம் பிரியக்கூடாது என்றுதான் நினைப்பார்கள். இதில் சிவகார்த்திகேயன் மேலே என்ன தப்பு இருக்கு? என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#சிவகார்த்திகேயன்#இமான்#Imman#Sivakarthikeyan
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement