Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.01.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஒரு பெரிய இயக்குனரின் மகள்னு கொஞ்சம் கூட காட்டிக்கள அக்கா நீங்க - விருமன் படத்தில் அதிதியுடன் நடித்தது குறித்து பிகில் பட நடிகை.

A
எழுதியவர்Arun12 ஜனவரி, 2022 அன்று 07:35 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என கொண்டாடப்படுபவர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. இவருடைய இளைய மகளான அதிதி தற்போது தமிழ் சினிமா உலகில் இளம் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார். தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. அதனைத் தொடர்ந்து இவர் கொம்பன், மருது, தேவராட்டம், புலிகுத்தி பாண்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார்.

May be an image of 2 people, people standing and outdoors

பெரும்பாலும் இவர் இயக்கிய படங்கள் எல்லாம் கிராமத்து பாணியில் இருக்கும். அதே போல் விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அதிதி நடிக்கிறார். மேலும், கடந்த சில மாதங்களாகவே மதுரை, தேனி பகுதிகளில் தொடர்ச்சியாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விருமன் படத்தில் அதிதி சங்கர்:

அது மட்டுமில்லாமல் இன்னும் சில மாதங்களில் விருமன் படம் திரைக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள இந்திரஜா அவர்கள் விருமன் படப்பிடிப்பு குறித்தும், அதிதி குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

Indraja sankar first official statement after survivor tamil elimination |  Galatta

விருமன் படத்தில் இந்திரஜா:

அதில் அவர் அதிதியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதில் இந்திரஜா கூறியது, உண்மையான நண்பர்கள் எப்போதும் ஆத்மார்த்தமாக ஒன்றாக இருப்பார்கள். அதிதி அக்கா, இந்த வாக்கியம் சொல்வது போல நாம் இருவருக்கும் ஒரே விதமான ஆத்மா தான். விருமன் படத்தில் நான் சந்தித்த மிகவும் அற்புதமான நபர். வேறு ஒரு அம்மாவிடம் இருந்து கிடைத்த அக்கா. படப்பிடிப்பில் நடந்த அனைத்து மகிழ்ச்சிகளையும் மற்றும் ஜோக்குகளையும் மிஸ் செய்கிறேன்.

இந்திரஜா பதிவிட்ட போஸ்ட்:

நீங்கள் ஒரு மிகப் பெரிய இயக்குனரின் மகள் என்பதை கொஞ்சம் கூட காட்டிக்கொள்ளவில்லை. என்னிடமும் அனைவரிடமும் சகஜமாக பழகினீர்கள். உங்களிடம் இருந்த போது நான் மிகவும் சவுகரியமாக உணர்ந்தேன். நீங்கள் வாழ்வில் மேலும் மேலும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். லவ் யூ தேனு என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்க உள்ள கொரானா குமார் என்ற படத்தில் அதிதிசங்கர் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

ஒரு பெரிய இயக்குனரின் மகள்னு கொஞ்சம் கூட காட்டிக்கள அக்கா நீங்க - விருமன் படத்தில் அதிதியுடன் நடித்தது குறித்து பிகில் பட நடிகை.

ரோபோ சங்கர் மகள் இந்திரஜா:

இந்த படத்தை இயக்குநர் கோகுல் இயக்குகிறார். இந்தப் படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமே தயாரிக்கிறது. இதே நிறுவனம் தான் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். மேலும், வேல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 'வேல்ஸ்' பல்கலைக்கழகம் தான் சமீபத்தில் சிம்புவிற்கு டாக்டர் பட்டமும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#Viruman#இந்திரஜா#Indraja Shankar#அதிதி ஷங்கர்#indraja#விருமன்#இந்திரஜா ஷங்கர்
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement