Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
இயேசு எந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் பாவங்களை துடைத்தார் - புனித வெள்ளி பதிவில் கேட்ட நபர். கோபம் கொள்ளாமல் ஜேம்ஸ் வசந்தன் கொடுத்த விளக்கம்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.04.07பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இயேசு எந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் பாவங்களை துடைத்தார் - புனித வெள்ளி பதிவில் கேட்ட நபர். கோபம் கொள்ளாமல் ஜேம்ஸ் வசந்தன் கொடுத்த விளக்கம்.

A
எழுதியவர்Arun7 ஏப்ரல், 2023 அன்று 09:14 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இன்று புனித வெள்ளியை முன்னிட்டு ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் 'இன்று 'பெரிய வெள்ளி' (Good Friday). இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள். கிறிஸ்தவம் கட்டப்பட்டிருக்கும் அடிப்படை இதில்தான்.இந்த நிகழ்வை நினைவுகூறும் வண்ணம் கிறிஸ்தவர் பலரும் சிலுவைகளை அவர்கள் இல்லங்களிலும், ஆலயங்களிலும், கழுத்தில் தொங்கும் சங்கிலிகளிலும் வைத்துக்கொள்கின்றனர். இன்று இது ஒரு நாகரிகச் சின்னமாகவே மாறிவிட்டது.

இயேசு எந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் பாவங்களை துடைத்தார் - புனித வெள்ளி பதிவில் கேட்ட நபர். கோபம் கொள்ளாமல் ஜேம்ஸ் வசந்தன் கொடுத்த விளக்கம்.

ஆனால், 1,990 ஆண்டுகளுக்கு முன் ரோமப் பேரரசில் இது ஒரு அவமானச் சின்னம் (Symbol of Shame). ஏனெனில், கொடுங்குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையாக அவர்களை சிலுவையில் அறைவது வழக்கமாக இருந்தது. இப்படி கற்பனை செய்து பார்க்கலாம். இன்றைய சமூகத்தில் யாராவது தூக்குக் கயிற்றை கழுத்துச் சங்கிலியில் தங்கத்தில் செய்து போட்டுக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அது போலத்தான் அன்று, சிலுவை!

இயேசுவின் மரணம் இந்த ஈனச் சிலுவையை உன்னதச் சிலுவையாக மாற்றியது!வரலாற்று ஆசிரியரின் அறிக்கைகளின்படி இயேசு கிறிஸ்து சிலுவையில் கொல்லப்பட்டது ஏப்ரல் 3, A.D.33. பைபிலில் லூக்கா 23:46-ம் வசனத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறபடி பகல் 3 மணிக்கு, "பிதாவே, உமது கரங்களில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்" என்று சொல்லி உயிரை விட்டார்.

இயேசு எந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் பாவங்களை துடைத்தார் - புனித வெள்ளி பதிவில் கேட்ட நபர். கோபம் கொள்ளாமல் ஜேம்ஸ் வசந்தன் கொடுத்த விளக்கம்.

எத்தனையோ பேர் இதே சிலுவையில் கொல்லப்பட்டிருந்தாலும் ஏன் இயேசுவின் மரணம் இந்த அடிப்படையையே மாற்றியது? 'அந்த மரணம் தரும் முடிவில்லா வாழ்வு' (the death that gave eternal life) என்பதை உணரும், நம்பும் மக்கள்தான் கிறிஸ்தவர். பெயரை மாற்றிக் கொள்வதினாலோ, அந்தக் குடும்பத்தில் பிறப்பதினாலேயோ ஆவதில்லை என்று பதிவிட்டு இருந்தார். ஜேம்ஸ் வசந்தனின் இந்த பதிவிற்கு பல விதமான கமெண்டுகள் குவிந்தது.

அதில் ஒரு பயனர் 'தவறாக நினைக்க வேண்டாம். எனது சந்தேகம். இயேசு மனிதர்களின் பாவங்களை துடைக்க சிலுவையில் தொங்கினார். எந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் பாவங்களை துடைத்தார். அப்படியாயின் இப்போது மனிதர்கள் இன்னும் பாவம் செய்கிறார்கள். இன்னொரு முறை இயேசு வந்து பாவங்களை கழுவுவாரென நம்பியா? பாவத்தை போக்க படைத்த கடவுளே வன்முறையில் இறங்குவாரா? இதை தவிர பாவம் போக்க வேறு வழி இல்லையா ?' என்று பதிவிட்டு இருந்தார்.

இயேசு எந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் பாவங்களை துடைத்தார் - புனித வெள்ளி பதிவில் கேட்ட நபர். கோபம் கொள்ளாமல் ஜேம்ஸ் வசந்தன் கொடுத்த விளக்கம்.

இதற்கு சற்றும் கோபப்படாமல் பதில் அளித்த ஜேம்ஸ் வசந்தன் 'நீங்கள் இவைகளைப் பற்றி என்ன சொன்னாலும் நான் தவறாக நினைக்க மாட்டேன். மற்றவரைப் பற்றி எனக்குத் தெரியாது. 1. எனக்கும் இதே கேள்வி இருந்தது; பலருக்கும் உண்டு. இதை விளங்கிக்கொள்ள பலகாலம் ஆனது. அவர் சம காலத்திலும், மரணத்துக்குப் பின்னும் வருகிற யாருக்கும் இந்த பாவமன்னிப்பு உண்டு. ஒரே தகுதி, அதை நம்புவதுதான். 2. அவரை நம்புகிறவரெல்லாம் பாவமே செய்யாத யோக்கியன் என்று பொருளில்லை. பாவ உணர்வோடு, அதை அறிக்கையிட்டால் மன்னிக்க ஒருவர் உண்டு என்கிற உத்தரவாதத்தோடு வாழ்வது. அவ்வளவுதான்! 3. பாவங்களை மன்னிக்க, பாவமே செய்யாத ஒருவர்தான் தகுதியுள்ளவர் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய தர்க்கம்தானே. வேறு வழியே இல்லை என்று பைபில் சொல்கிறது.' என்று பதிவிட்டுள்ளார்.

தலைப்புகள்
#ஜேம்ஸ் வசந்தன்#James Vasanthan#James
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement