Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.02.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 3 நிமிடம்

கர்ப்பமாக இருப்பதால் உடல் எடை கூடிய காஜல், உருவ கேலிக்கு நீண்ட பதிவை போட்டு அவரே கொடுத்த பதிலடி

A
எழுதியவர்Arun9 பிப்ரவரி, 2022 அன்று 04:20 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருடைய உடல்வாகு குறித்து கிண்டல், கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின்' மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதன் பின் இவர் 2007 ஆம் ஆண்டு லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா சினிமா பக்கம் வந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் பழனி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின் இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

கர்ப்பமாக இருப்பதால் உடல் எடை கூடிய காஜல், உருவ கேலிக்கு நீண்ட பதிவை போட்டு அவரே கொடுத்த பதிலடி

இவருடைய படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் தமிழில் இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார். இதனிடையே காஜல் மும்பை தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை நீண்டகாலமாக காதலித்து வந்ததை அறிவித்தார். பின் 2020 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமணம் கொரோனா லாக் டவுனில் இருந்ததால் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

காஜல் திரை- குடும்ப பயணம்:

திருமணத்திற்கு பின்னர் காஜல் தன் கணவருடன் அடிக்கடி சுற்றுல்லா சென்று இருந்தார். இறுதியாக வெங்கட் பிரபு இயக்கிய ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் தொடரில் காஜல் நடித்தார். மேலும், தற்போது காஜல் கர்ப்பமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. காஜல் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இதனால் தற்போது கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் காஜல் படங்களில் இருந்து விலகி விட்டார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருடைய உடல்வாகு குறித்து சில நெட்டிசன்கள் கேலி கிண்டல் செய்திருக்கிறார்கள்.

கர்ப்பமாக இருப்பதால் உடல் எடை கூடிய காஜல், உருவ கேலிக்கு நீண்ட பதிவை போட்டு அவரே கொடுத்த பதிலடி

விமர்சித்தவருக்கு காஜல் கொடுத்த பதிலடி:

இதற்கு காஜல் அகர்வால் கொடுத்திருக்கும் பதிலடி பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், காஜல் அகர்வால் கர்ப்பகாலத்தில் இருக்கும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்று அவர் பதிவில் கூறியிருப்பது, எனது வாழ்க்கை, எனது உடல், எனது வீடு மற்றும் மிக முக்கிய எனது பணியிடத்தில் மிகவும் அற்புதமான புதிய முன்னேற்றங்களை நான் பார்க்கிறேன். கேலி, கிண்டல் எல்லாம் செய்பவர்களுக்குக்காக தான் சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன். கர்ப்ப காலத்தில் நம் உடல் எடை அதிகரிப்பு உட்பட பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. ஹார்மோன் மாற்றங்கள் குழந்தை வளரும் போது நம் வயிறு மற்றும் மார்பகங்கள் பெரிதாக்கும்.

கர்ப்பகாலத்தில் பெண்கள் செய்ய வேண்டியவை:

இது நம் உடலில் பாலுக்கு தயாராகிறது. சிலருக்கு உடல் பெரிதாகவும் நம் வாழ்க்கையில் முன்னதை விட மிகவும் மிகவும் சோர்வாகவும் இருக்கலாம். அடிக்கடி மனநிலை மாறுபடலாம். எதிர்மறையான மனநிலை வரவும் அதிக வாய்ப்புள்ளது. மேலும், பிரசவத்திற்கு பிறகு நாம் முன்பு இருந்ததை திரும்பப்பெற சிறிது காலம் ஆகும். அல்லது அதற்கு முன்பு நாம் எப்படி இருந்தோமோ அதை முழுமையாக திரும்பிப் பெற முடியாமலும் போகலாம். ஆனால், இந்த மாற்றங்கள் எல்லாம் இயற்கையானவை. நம் வாழ்வின் மிக அழகான அதிசயமான மற்றும் விலைமதிப்பற்ற கர்ப்ப காலத்தில் நாம் இதுகுறித்து சங்கடமாக அல்லது அழுத்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. குழந்தை பிறக்கும் போது இவை அனைத்தும் மறந்து நாம் அனுபவிக்க இருக்கும் கொண்டாட்டத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கர்ப்பமாக இருப்பதால் உடல் எடை கூடிய காஜல், உருவ கேலிக்கு நீண்ட பதிவை போட்டு அவரே கொடுத்த பதிலடி

பெண்களின் கர்ப்பகாலம் குறித்து காஜல் கூறியது:

ஒரு குழந்தையை பிரசவிக்க ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க பெண்களின் உடல் ஆச்சரியமாக இருக்கிறது. மனதில் ஏற்படும் சில உடல் மாற்றங்கள் எல்லோருக்கும் கஷ்டமாகவும் சங்கடமாகவும் தான் இருக்கும். ஆனால், அவை அனைத்தும் உங்கள் வளரும் குழந்தைகளுக்கு ஆதரவளிப்பது. நேர்மையான வேலைகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குழந்தை வளர வளர உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பது பற்றி உங்கள் கணவர், குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் பேசுங்கள். உங்கள் உணர்வுகளை அடைத்து வைத்திருப்பது மிக மோசமாக உணரவைக்கும். வழக்கமான உடல் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். நீச்சல், நடைபயிற்சி,யோகா எல்லாம் உங்கள் மனதை தெளிவுபடுத்தும். கர்ப்ப காலத்தில் யோகா செய்வதை மருத்துவரிடம் ஆலோசனை செய்து செய்யலாம். உங்கள் உடல் எப்படி இருக்கிறது என்பதில் கவனம் செலுத்தவும்.

கர்ப்பமாக இருப்பதால் உடல் எடை கூடிய காஜல், உருவ கேலிக்கு நீண்ட பதிவை போட்டு அவரே கொடுத்த பதிலடி

வைரலாகும் காஜலின் இன்ஸ்டா பதிவு:

உங்கள் உடலுக்கும் மனதுக்கும் இடையே உள்ள இணைப்பில் அதிக கவனம் செலுத்த யோகா தேவை. அதேபோல மருத்துவரின் ஆலோசனை மற்றும் மசாஜ் செய்து மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கலாம். உங்களால் முடிந்தவரை கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருப்பதை உணர்வீர்கள். உங்களது தேவைப்பட்டால் மன நல உதவியாளரையும் நாடலாம். இந்த உதவியை அணுகுவதில் மூலம் எந்த அவமானமும் கிடையாது. உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் தான் இதை செய்கிறீர்கள். யாரைப்பற்றியும், செய்யும் கேலி கிண்டல்களை பற்றியும் கவலைப்படாதீர்கள் என்று காஜல் அகர்வால் பதிவிட்டு இருக்கிறார். காஜல் அகர்வாலின் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் ஆதரவு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தலைப்புகள்
#Kajal Aggarwal#காஜல் அகர்வால்#Kajal Aggarwal Pregnant#காஜல் அகர்வால் கர்ப்பம்
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement