Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
K1 5
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இந்தி திணிப்பை பற்றிய படம் - எப்படி இருக்கிறது 'ரகு தாத்தா'- இதோ முழு விமர்சனம்

எழுதியவர்Rajkumar15 ஆகஸ்ட், 2024 அன்று 12:28 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் 'ரகு தாத்தா'. இப்படத்தை புது இயக்குனர் சுமன் குமார் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் கதை ஆசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கீர்த்தியுடன் இணைந்து தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகியுள்ள படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

இந்தி திணிப்பை பற்றிய படம் - எப்படி இருக்கிறது 'ரகு தாத்தா'- இதோ முழு விமர்சனம்

கதைக்களம்:

படத்தில் 1970களில் வாழும் முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்ணாக இருக்கிறார் கயல்விழி(கீர்த்தி சுரேஷ்). சிறுவயதிலிருந்தே ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராடும் இவர் தனது ஊரில் உள்ள ஏக்தா சபாவை மூடுகிறார். மேலும், தனது ஊரில் உள்ள அனைத்து பெண்களுக்கும் முன்மாதிரியாக விளங்குகிறார். வங்கியில் வேலை செய்யும் கயல்விழிக்கு திருமணம் முடிப்பதில் சுத்தமாக விருப்பம் இல்லை. ஆனால், தனது தாத்தாவின் ஆசைக்காக கயல்விழி திருமணத்திற்கு சம்மதிக்கிறார். பின் வீட்டில் வரன் பார்க்க தொடங்கியவுடன், கயல்விழி நமக்குத் தெரியாத ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு பதிலாக, தான் நன்கு பழகிய தமிழ்ச்செல்வனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்.

கடைசியில், தமிழ்செல்வனும் அனைத்து ஆண்களைப் போல பிற்போக்கு சிந்தனை கொண்டவர் என்று கயல்விழிக்கு தெரிய வருகிறது. அதனால் தமிழ்ச்செல்வன் இடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று கயல்விழி கல்கத்தாவிற்கு பணியிடை மாற்றம் செய்து கொண்டு போக முடிவு செய்கிறார். அதனால், தான் இத்தனை நாளாக எதிர்த்த ஹிந்தி பரிட்சையை எழுத முயற்சி செய்கிறார். கடைசியில், கயல்விழி தன் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள ஹிந்தி பயின்றாரா? இவர் இந்தி பயில்வது கிராம மக்களுக்கு தெரிய வந்ததா? கயல்விழிக்கு திருமணம் நடந்ததா? இல்லையா ?என்பது தான் மீதிக்கதை.

இந்தி திணிப்பை பற்றிய படம் - எப்படி இருக்கிறது 'ரகு தாத்தா'- இதோ முழு விமர்சனம்

கீர்த்தி சுரேஷ் மற்றும் படத்தில் நடித்த அத்தனை நடிகர்களின் நடிப்பும் பார்க்கும் படியும் ரசிக்கும் படியும் உள்ளது. ஷான் ரோல்டன் முடிந்தவரை தனது இசையின் மூலம் பல காட்சிகளை தூக்கி நிறுத்த முயற்சித்துள்ளார். ரகு தாத்தா கதை என்னவோ பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தாலும், படத்தை வெளிகொண்டு வந்த விதம் ரசிகர்களை சரியாக சென்று அடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். படம் பார்ப்பவர்களின் பொறுமையை சோதிக்கும் அளவிற்கு மெதுவாக திரைக்கதை செல்கிறது. ஹிந்தி திணிப்பு மற்றும் கலாச்சார திணிப்பிற்கு எதிராக பேசும் இப்படம் இன்னும் நேர்த்தியாக கொண்டு போயிருந்தால் ரசிகர்களை சரியாக சென்று சேர்ந்திருக்கும்.

நிறை:

கதைக்களம் ஓகே

காமெடி காட்சிகள் ரசிகர்களை நன்கு ஈர்த்துள்ளது.

சான் ரோல்டன் இசை பலம்

நடிகர்களை தேர்ந்தெடுத்த விதம் சிறப்பு

இந்தி திணிப்பை பற்றிய படம் - எப்படி இருக்கிறது 'ரகு தாத்தா'- இதோ முழு விமர்சனம்

குறை:

திரைக்கதை நமது பொறுமையை சோதிக்கிறது.

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்.

படம் ஒரு டிராமா போல் இருக்கிறது.

திரைக்கதையில் இன்னும் உழைத்திருக்கலாம்.

மொத்தத்தில் ரகு தாத்தா 'பொறுமை' வேண்டும்

தலைப்புகள்
#ரகு தாத்தா விமர்சனம்#Raghu Thatha Review#ரகு தாத்தா#Raghu Thatha
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement