Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.04.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'இந்து பெண்களுக்கு தொல்லை கொடுத்தால் இஸ்லாம் பெண்களை கடத்தி சென்று' - மசூதி முன்பு மிரட்டல் விடுத்த சாமியார். குஷ்பூ விளக்கம்.

A
எழுதியவர்Arun8 ஏப்ரல், 2022 அன்று 01:41 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இந்து பெண்களுக்கு தொல்லை கொடுத்தால், முஸ்லிம் பெண்களை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்வேன்" என்று இந்து சாமியார் ஒருவர் மசூதி முன்பு பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருகும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து பா ஜ க உறுப்பினரும் நடிகையுமான குஷ்பூ பதில் கொடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து மத சாமியார் ஒருவர் ஜீப்பில் இருந்தவாறு பொதுமக்கள் இடையே உரை நிகழ்த்தினார்.

https://twitter.com/JAslamBasha/status/1512138297367154692

அப்போது சீதாபூரில் உள்ள மசூதிக்கு அருகே ஜீப் சென்ற போது, "இந்தப் பகுதியில் எந்த இந்து பெண்களுக்காவது முஸ்லிம்கள் தொல்லை கொடுத்தால், இஸ்லாமிய பெண்களை கடத்திச் சென்று பொதுவெளியில் வைத்து அவர்களை பாலியல் வன்புணர்வு செய்வேன்" என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அவர் இவ்வாறு கூறியதும், அங்கிருந்த பெரும்பாலான மக்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷமிட்டனர்.

இதையும் பாருங்க : நம்மல Entertain செய்ய, விஜய் ஒரு வருசத்துல இத்தனை நாள் வேல செய்றாரு, அளந்துவிட்ட அபிஷேக், கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.

இந்து பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு :

இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் எழுந்தது. பின்னர், போலீஸார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில், வெறுப்புணர்வை ஊட்டும் வகையில் பேசிய சாமியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 'அல்ட் நியூஸ்' என்ற செய்தி வலைதளத்தின் துணை நிறுவனர் முகமது ஜுபைர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அந்த சாமியார் பேசிய வீடியோவை முகமது ஜூபைர் சமூக வலைதளத்தில் இன்று வெளியிட்டார்.

https://twitter.com/khushsundar/status/1512141925104893952

சீதாபூர் போலீஸார் விசாரணை :

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பெரும் வைரலாக பரவி பெரும்பாலானோரின் கண்டனத்துக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறது.இப்படி ஒரு நிலையில் , இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாகவும், சாமியார் பேசியது உண்மை என தெரியவந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் சீதாபூர் போலீஸார் தெரிவித்தனர்.

https://twitter.com/khushsundar/status/1512220087419215875

குஷ்பூ விளக்கம் :

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் ரசிகர் ஒருவர் நடிகை குஷ்பூவிடம் கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த குஷ்பூ, ஒவ்வொரு மனிதனும் இதை கண்டிப்பார். மனிதநேயம் எந்த அரசியல் கட்சிக்கும் அப்பாற்பட்டது. ஒவ்வொரு பெண்ணும் இந்த தாய்நாட்டின் மகள்கள். அவளுடைய கண்ணியத்தை பாதுகாப்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமை. ஒரு பெண்ணைப் பாதுகாக்க என்னால் முடிந்த அனைத்தையும் எப்போதும் செய்வேன் என்று பதில் அளித்துள்ளார்.

'இந்து பெண்களுக்கு தொல்லை கொடுத்தால் இஸ்லாம் பெண்களை கடத்தி சென்று' - மசூதி முன்பு மிரட்டல் விடுத்த சாமியார். குஷ்பூ விளக்கம்.

இது பாஜக அல்ல :

இதுகுறித்து மேலும் பதிவிட்டுள்ள குஷ்பூ, ஆனால் பாய் , இது நீங்கள் நினைப்பது போல் பாஜக அல்ல. ஒவ்வொரு வெறுப்பு பேச்சு அல்லது வகுப்புவாத பதட்டத்தையும் பாஜகவுடன் இணைப்பது மிகவும் எளிதானது மற்றும் வசதியானது. எதிர்க்கட்சிகளிடம் இது வாடிக்கையாகி விட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ​​நமது நாட்டில் மிக மோசமான வகுப்புவாத உரிமைகளைப் பார்த்தோம். பாஜக மக்களுடன் நின்று பாதுகாக்கிறது என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#குஷ்பூ#உ.பி சாமியார் மிரட்டல்#kushboo#உ.பி சாமியார்#குஷ்பூ ட்விட்டர்
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement