Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
என்னது, இந்த ஹிட் பாட்டெல்லாம் எழுதியது இவரா? யாரும் அறியாத கவிஞரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பாக்யராஜ்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.02.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

என்னது, இந்த ஹிட் பாட்டெல்லாம் எழுதியது இவரா? யாரும் அறியாத கவிஞரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பாக்யராஜ்

S
எழுதியவர்Siva25 பிப்ரவரி, 2024 அன்று 08:04 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சினிமா உலகில் நமக்குத் தெரிந்த வரை பாடலாசிரியர்கள் என்றால் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், வைரமுத்து, நா.முத்துக்குமார், பா.விஜய், தாமரை என்று குறிப்பிட்ட சிலரின் லிஸ்ட் மனதில் இருக்கிறது. ஆனால் சில பாடல்களைக் கேட்கும் போது இந்தப் பாட்டை எழுதியது யார் என்று தேடத் தோன்றும். அவ்வாறு பல ஹிட் பாடல்களை எழுதி கடைசிவரை கொண்டாடப்படாத பாடலாசிரியர்தான் குருவிக்கரம்பை சண்முகம்.

என்னது, இந்த ஹிட் பாட்டெல்லாம் எழுதியது இவரா? யாரும் அறியாத கவிஞரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பாக்யராஜ்

எத்தனையோ நடிகர்களையும், சினிமா தொழில்நுட்ப வல்லுநர்களையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய திரைக்கதை பிதாமகன் பாக்யராஜ்தான் குருவிக்கரம்பை சண்முகத்தை சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார். தஞ்சை மாவட்டம் குருவிக்கரம்பை என்கிற குக்கிராமத்தில் பிறந்தவர் சண்முகம். இளம் வயதிலேயே இவருக்கு கவிதை எழுதும் ஆற்றல் கைக்கு வந்தது. பாரதிதாசன் மீது அளவு கடந்த பற்றுக் கொண்டிருந்த சண்முகம், அவரது மாணவர்களுள் ஒருவராக இருந்து கவிப்புலமையை மேம்படுத்தினார்.

1968 ஆம் ஆண்டு நடந்த உலகத்தமிழ் மாநாட்டு கவிதைப் போட்டியில் பங்கேற்று, ‘புகாரில் ஒருநாள்’ என்ற கவிதைக்கு முதல்பரிசு பெற்று, தமிழறிஞர்களின் கவனத்தை ஈர்த்தார்.ஆரம்பத்தில் மரபுக்கவிதை, பின்னர் புதுக்கவிதை என பயணம் மாறிய கவிஞர்களுள் இவரும் ஒருவர். இவரது படைப்புகளில் ‘நினைவுச் சின்னம்’, ‘பாட்டுப் பறவை’, ‘ஒரு குயிலின் குரல்’, ‘செந்நெல் வயல்கள்’, ‘குருவிக்கரம்பை சண்முகம் கவிதைகள்’, ‘பூத்த வெள்ளி’, ‘கவிதை அரங்கேறும் நேரம்’, ‘விரல் விளக்குகள்’ ஆகியவை பரிசுகளையும் பலரது பாராட்டுகளையும் அள்ளி வந்தன.

என்னது, இந்த ஹிட் பாட்டெல்லாம் எழுதியது இவரா? யாரும் அறியாத கவிஞரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பாக்யராஜ்

சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த சண்முகத்தை ஒரு கவியரங்கில் இவரின் புலமையைப் பார்த்து வியந்த இயக்குநர் கே.பாக்யராஜ் தனது அந்த 7 நாட்கள் திரைப்படத்தில் முதன்முதலாக வாய்ப்புக் கொடுத்தார். ‘அந்த 7 நாட்கள்’ படத்துக்காக ஒரு டூயட் ட்யூன் கவிஞரிடம் கொடுக்கப்பட்டது. தனது கவிதைத் தொகுப்பின் தலைப்பான ‘கவிதை அரங்கேறும் நேரம்’ என்று வார்த்தைகளை அடுக்கி, ‘மலர்க்கணைகள் பரிமாறும் தேகம்……’ என ஒரு மணி நேரத்துக்குள் எழுதி முடித்தார்.

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கட்டிப்பிடித்துப் பாராட்டி, கவிஞரைப் பெருமைப்படுத்தினார். எழுதிய முதல் பாடலே மிகப்பெரும் புகழைப் பெற்றதில் மெய்சிலிர்த்துப் போனார் சண்முகம். போகுமிடங்களில் எல்லாம் ‘அந்தப் பாட்டை எழுதியது நீங்கள் தானே?’ என்று கேட்டு, ரசிகர்கள் உற்சாகப்படுத்தினார்கள். ஜெயச்சந்திரன் – ஜானகி குரலில் ஒலித்த அந்தப் பாடல் உலகத்தமிழ் திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

என்னது, இந்த ஹிட் பாட்டெல்லாம் எழுதியது இவரா? யாரும் அறியாத கவிஞரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பாக்யராஜ்

அதன்பின் பாக்யராஜ் நடித்த பல படங்களில் பாடலாசிரியராகப் பணிபுரிந்தார். இவரின் வரிகளில் உருவான சில ஹிட் பாடல்கள் : ‘டார்லிங் டார்லிங் டார்லிங்‘ படத்தில் இடம்பெற்ற ‘ஓ நெஞ்சே நீ தான் பாடும் கீதங்கள்…’ ‘கன்னிராசி’ படத்தில் இளையராஜா இசையில் இவர் எழுதி, மலேசியா வாசுதேவனும் வாணி ஜெயராமும் பாடிய ‘சுகராகமே சுகபோகமே…’ ‘ஆண்பாவம்’ படத்தில் சண்முகம் எழுதிய ‘குயிலே குயிலே பூங்குயிலே…’ 'எங்க சின்ன ராசா’ படத்தில் ‘மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்…’ போன்ற பல ஹிட் பாடல்களை இயற்றி சண்முகம் இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#bhagyaraj#பாக்கியராஜ்#குருவிக்கரம்பை சண்முகம்
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement