Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.11.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தளபதி படத்தின் முதல் ஷாட்டில் மயங்கி விழுந்த ஆயிரத்தில் ஒருவன் அழகம்பெருமாள்.

எழுதியவர்Rajkumar10 நவம்பர், 2019 அன்று 04:11 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் மணிரத்னம். வரலாற்று சிறப்பு மிக்க படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயங்கி வருகிறார். இயக்குனர் மணிரத்தினம் 1983ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'பல்லவி அனுபல்லவி' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் 1985-ம் ஆண்டு 'பகல் நிலவு' என்ற படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார்.

தளபதி படத்தின் முதல் ஷாட்டில் மயங்கி விழுந்த ஆயிரத்தில் ஒருவன் அழகம்பெருமாள்.

அதன் பின்னர் இதயக்கோவில் மௌன ராகம் நாயகன் அக்னி நட்சத்திரம் அஞ்சலி போன்ற பல்வேறு படங்களை இயக்கினார் மணிரத்னம் ஆனால் இவர் சூப்பர் ஸ்டாரை வைத்து எடுத்த தளபதி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் ஏற்படுத்தித் தந்தது. மணி ரத்னத்திடம் பல்வேறு நபர்கள் வேலை செய்துள்ளனர். ஆனால், இவருக்கும் நடிகரும் இயக்குனருமான அழகம் பெருமாளுக்கு உள்ள 30 ஆண்டு உறவை பற்றி பெரும்பாலானோர் அறிய வாய்ப்பில்லை. அதனை பற்றி பார்த்திபன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதை கண்டு அதனை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அழகம் பெருமாள் அழகம்பெருமாள் அவர்கள் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக முதல்முதலில் சேர்ந்து பணியாற்றிய படம் தளபதி. உதவி இயக்குனராக சேர்ந்த முதல்நாளிலேயே சீன் தொடங்குவதற்காக அவரை கிளாப் அடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். கடும் வெயில், சுற்றி நின்ற கூட்டம், முதல் பணியாதலால் ஏற்பட்ட படபடப்பு எல்லாம் சேர்ந்து கொள்ள கிளாப் அடிப்பதற்கு முன்பு மயங்கி விழுந்திருக்கிறார் அழகம்பெருமாள்.

இதையும் பாருங்க : நடிகர் கருணாஸ் மகனை அசுரன்ல பார்த்திருப்பீங்க. அவரது மகளை பார்த்துளீர்களா.

இதைப்பார்த்து ஓடி வந்த மணிரத்னம் அவரை தேற்றி இயல்பு நிலைக்கு திருப்பியிருக்கிறார். பின்பு அங்கிருந்தவர்களிடம் "இவர் இன்னைக்குதான் ஜாயின் பண்ணிருக்கார்.அவர் சூட்டிங் பத்தியெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டாமா?கொஞ்ச நாள் ஆகணும்ல. மொதல் நாள்லயே யாரு அவரை கிளாப் அடிக்க விட்டது"என கடிந்து கொண்டாராம்.அங்கு தொடங்கியது அவர்களின் நட்பு. இன்றுவரை அது எந்தவித தொய்வுமின்றி வளர்ந்து கொண்டே இருக்கிறது. தளபதிக்கு பின் வந்த அனைத்து படங்களின் கிராமங்கள் எல்லாமே திருநெல்வேலியை மையப்படுத்தியவை.அந்த கதாபாத்திரங்கள் பேசுவதெல்லாம் சுத்தமான துளி கலப்பில்லாத திருநவேலி வட்டார வழக்கைத்தான்.

தளபதி படத்தின் முதல் ஷாட்டில் மயங்கி விழுந்த ஆயிரத்தில் ஒருவன் அழகம்பெருமாள்.

தளபதி படத்தில் ஆரம்பக்காட்சியில் மனைவி தன் கணவனுக்கு குளிப்பாட்டிக்கொண்டிருப்பாள். கதவுதட்டும் ஓசை கேட்டு" அட யாருலே அது? பண்டியல் அதுவுமா?" என்றபடி சென்று கதவை திறப்பாள். பண்டிகைக்கு இங்கே கொங்கு நாட்டில் நோம்பி என்பார்கள். அதற்க்கு தென்மாவட்டத்தில் பண்டியல். இதே போல் ரோஜா படத்திலும் ஆரம்ப கிராம காட்சிகள் திருநெல்வேலியின் ஒரு கிராமத்தை சார்ந்தவை. தனது ஆடுகளை காணாமல் தேடுபவனை அழைத்து "அம்பி அய்யர் வீட்டுச் சாம்பார்ல கொதிக்குது போயி பாருலே" என கிழவி கேலி செய்வது அம் மண்ணுக்கே உரிய ஒன்று

அதற்கு அடுத்து வந்த திருடா திருடா வும் திருநெல்வேலி வட்டாரத்தை கதைக்களமாக கொண்டதுதான். பின்பு பம்பாயிலும் குரு விலும் திருநெல்வேலி மாவட்டம் என்றே படத்திலும் குறிக்கப்படும் கதை நடக்கும் ஊர்கள். அதுவும் குரு படத்தை சொல்லியே ஆகவேண்டும் அப்படத்தின் நாயகன் வானளாவ உயர்ந்த பின்னும் வட்டார வழக்கு பேசுவதை கைவிடமாட்டான். குரு படத்துக்கு தமிழில் வசனமெழுதியவர் அழகம்பெருமாள் தான். பின்பு அலைபாயுதேவில் தனது குருநாதர் மூலமாகவே திரைக்கு பின்னிலிருந்து திரைக்கு முன்பு நடிகராக அறிமுகமானார். அப்படத்தில் ஹவுஸ் ஓனர் தொடங்கி கற்றதுதமிழ்,புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், தரமணி என முத்திரை பதித்துக்கொண்டே செல்கிறார். அவர் இயக்கிய டும்டும்டும் குறிப்பிடத்தக்க திருநவேலி படங்களுள் ஒன்று.

நன்றி - பார்த்திபன்.

தலைப்புகள்
#அழகம் பெருமாள்#அழகம் பெருமாள் மணிரத்னம்#Azhagam Perumal Maniratnam#Azhagam Perumal
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement