Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.11.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ராஸ்கேல்ஸ் இத செஞ்சு இருந்தா ஜெய்ச்சி இருக்கலாம் - இந்திய அணியின் தோல்வி குறித்து உதயநிதி பட விழாவில் பேசிய மிஸ்கின்

S
எழுதியவர்Siva11 நவம்பர், 2022 அன்று 04:44 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

உலக கோப்பை T20 தொடரில் இந்தியா தோற்றது குறித்து மிஸ்கின் பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதி சுற்றில் வலுவான இங்கிலாந்தை எதிர்கொள்ள தகுதி பெற்றது. அந்த நிலையில் நவம்பர் 10ஆம் தேதியன்று அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கிய 2வது அரையிறுதி போட்டியில் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே தொடக்க வீரர் ராகுல் 5 (5) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார்.

ராஸ்கேல்ஸ் இத செஞ்சு இருந்தா ஜெய்ச்சி இருக்கலாம் - இந்திய அணியின் தோல்வி குறித்து உதயநிதி பட விழாவில் பேசிய மிஸ்கின்

இருப்பினும் அடுத்து களமிறங்கிய விராட் கோலியுடன் கைகோர்த்து 2வது விக்கெட்டுக்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரோகித் சர்மா கடைசி வரை தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 4 பவுண்டரியுடன் 27 (28) ரன்களில் நடையை கட்டினார். அப்போது வந்த சூரியகுமார் யாதவ் வழக்கம் போல 1 பவுண்டரி 1 சிஸ்டருடன் அதிரடியை தொடங்கினாலும் திடீரென்று 14 (10) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 75/3 என தடுமாறியது.

இதை தொடர்ந்து இந்தியாவை பாண்டியாவுடன் 4வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய விராட் கோலி 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் அரை சதமடித்து 50 (40) ரன்களில் முக்கிய நேரத்தில் அவுட்டானார்.அப்போது வந்த ரிஷப் பண்ட் 6 (4) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் கடைசி வரை நங்கூரமாக நின்று கடைசி நேரத்தில் அடித்து நொறுக்கிய ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 63 (33) ரன்கள் விளாசி பினிஷிங் செய்து காப்பாற்றியதால் தப்பியது இந்தியா.

ராஸ்கேல்ஸ் இத செஞ்சு இருந்தா ஜெய்ச்சி இருக்கலாம் - இந்திய அணியின் தோல்வி குறித்து உதயநிதி பட விழாவில் பேசிய மிஸ்கின்

இறுதியில் 20 ஓவர்களில் 168/6 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட்களை எடுத்தார். அதன் பின் 169 ரன்களை துரத்திய அந்த அணிக்கு கேப்டன் ஜோஸ் பட்லர் – அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய ஓப்பனிங் ஜோடி முதல் பந்திலிருந்தே இந்திய பவுலர்களை செட்டிலாக விடாமல் சரமாரியாக அடித்து நொறுக்கியது. இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து பல இந்திய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இப்படி ஒரு நிலையில் இந்திய அணி தோல்வி குறித்து இயக்குனர் மிஸ்கின் 'கலக தலைவர்' படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசி இருக்கிறார். நெஞ்சுக்கு நீதி படத்தை தொடர்ந்து உதயநிதி நடிக்கும் படம் 'கலக தலைவன்'. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். பிசாசு படத்தின் இசை அமைப்பாளர் அரோல் கரோலி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.தில்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=xHpo5LsDXjM

இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை ராயப்பேட்டை உள்ள சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அருண் ராஜா காமராஜ், மிஸ்கின் மாறி செல்வராஜ், போன்ற பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய மிஸ்கின் 'இந்தியா தோற்றுவிட்டதால் மிகவும் சோகமாகிவிட்டேன் நன்றாகத்தான் ஆடினார்கள் ராஸ்கல்ஸ் ஒரு 200 அடித்திருந்தால் வென்றே இருக்கலாம் அதுவும் ஒரு விக்கெட் கூட இழக்காமல் நம்மை தோற்கடித்து விட்டார்கள் மிகவும் சோகமாக இருந்தேன் அதன் பின்னர் என்று ஒரு நல்ல விழாவிற்கு செல்ல போகிறோம் என்று சந்தோஷமாகி வந்து விட்டேன்' என்று பேசி இருக்கிறார்.

தலைப்புகள்
#T20 World Cup#mysskin#ind vs eng#மிஸ்கின்
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement