Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Naisxxx
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2026.01.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் முதல் காதல் நகைச்சுவை படம்

எழுதியவர்subhashini1 ஜனவரி, 2026 அன்று 04:13 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் தயாரிப்பில் 'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு. பிரபல மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்கும் இப்படம் ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள நிலையில் விரைவில் வெளியாகிறது. திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கியுள்ள முதல் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் முதல் காதல் நகைச்சுவை படம்

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் ‍பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிக்கும் இப்படத்தை 'நாய் சேகர்' திரைப்படத்தை இயக்கியவரும், 'கோமாளி', 'கைதி', 'விஐபி 2', 'இமைக்கா நொடிகள்', மற்றும் 'கீ' உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், நிறைய குறும்படங்களையும் யூடியூப் வீடியோக்களை உருவாக்கியவருமான கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட பணிகளை முடித்து படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். திரைப்படத்தின் பெயர், இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெகு விரைவில் செய்யப்படும்.

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் தயாரிப்பு:

அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் வைகையில் இப்படம் உருவாகியுள்ளது, தொடக்கம் முதல் இறுதி வரை நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாத வகையில் இந்த திரைப்படம் இருக்கும் என்று குழுவினர் தெரிவிக்கின்றனர்.இந்த திரைப்படத்தை கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்குவதோடு, நாயகனாகவும் நடிக்கிறார். பிரபல மலையாள நடிகையும் 'கொட்டுக்காளி' தமிழ் படத்தில் நடித்தவருமான‌ அன்னா பென் நாயகியாக நடிக்க, முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் முதல் காதல் நகைச்சுவை படம்

படம் குறித்த தகவல்:

திரைப்படம் குறித்து பேசிய கிஷோர் ராஜ்குமார், "காதலும் நகைச்சுவையும் நிரம்பிய‌ கதை இது. படம் முழுக்க ஃபீல் குட் உணர்வை ரசிகர்களுக்கு தரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. பாக்யராஜ் சார் இயக்கிய படங்கள் போல இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் வருவதில்லையே என ரசிகர்களிடையே ஒரு ஏக்கம் உண்டு. அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் இந்த படம் இருக்கும்," என்றார். மேலும் பேசிய அவர், "ஜோடி பொருத்தம் குறித்து பேசும் இந்த கலகலப்பான படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும்.

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் முதல் காதல் நகைச்சுவை படம்

தொழில்நுட்ப கலைஞர்கள்:

மிகவும் திறமையான நடிகை என பெயரெடுத்த அன்ன பென் உடன் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்களித்த நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி," என்றார்.இப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும் இணை எழுத்தாளராகவும் பிரவீன் பாலு பங்காற்ற, படத்தொகுப்பை ராம் பாண்டியன் கையாள்கிறார். இவர்கள் இருவரும் சதீஷ் நாயகனாக அறிமுகமாகி கிஷோர் ராஜ்குமார் இயக்கிய 'நாய் சேகர்' படத்திலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. கலகலப்பான பாடல் ஒன்றுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். ஶ்ரீ சசிகுமார் கலை இயக்குநர் ஆவார். ஆடை வடிவமைப்பு - கிருத்திகா சேகர், நிர்வாக தயாரிப்பு - எஸ். என். அஸ்ரப்/நரேஷ் தினகரன். நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் தயாரிப்பில் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

தலைப்புகள்
#Noise And Grains Production#kishore rajkumar#நாய்ஸ் அண்டு கிரைன்ஸ்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement