Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Palx
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.03.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

குமார்-அரசி காதல் அறிந்து அதிர்ச்சியடைந்த சரவணன், பாண்டியன் என்ன செய்ய போகிறார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

எழுதியவர்subhashini13 மார்ச், 2025 அன்று 07:07 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் செந்தில், மளிகை பொருட்களை கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தார். அப்போது தங்கமயில், வெளியே வந்தார். செந்திலை பார்த்தவுடன் தங்கமயில் ஷாக் ஆகி, ஹோட்டலில் சாப்பிட வந்தேன் என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார். செந்தில் அதை நம்பி விட்டு சென்றார். பின் ஹோட்டல் ஓனர், வேலை செய்யும் போது ஒழுங்காக செய்யுங்கள் என்று திட்டி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் ராஜி- கதிர் இருவரும் நண்பரின் திருமணத்திற்கு தயாராகி சென்றார்கள். மண்டபத்தில் கதிரை பற்றி எல்லா பெண்களுமே ரொம்ப புகழ்ந்து பேசுவதால் ராஜிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

குமார்-அரசி காதல் அறிந்து அதிர்ச்சியடைந்த சரவணன், பாண்டியன் என்ன செய்ய போகிறார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

நேற்று எபிசோட்டில் நண்பர் திருமணத்தில் சந்தோஷமாக ராஜி- கதிர் இருவரும் ஆட்டம் பாட்டம் என்று இருந்தார்கள். இன்னொரு பக்கம் செந்தில், தலைவலி தாங்க முடியாததால் வீட்டிற்கு வந்துவிட்டார் . அந்த சமயம் வந்த பாண்டியன், கடையில் வேலை முடிந்ததா? எதற்காக சீக்கிரம் வந்தாய்? வசூல் கணக்கு எங்கே? அந்த பணத்தை பாதி எடுத்து விட்டாயா? என்றெல்லாம் மோசமாக பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட செந்தில், ரூமிற்கு சென்று விட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் மீனா- கோமதி இருவரும் செந்திலை சமாதானம் செய்யப் பார்த்தார்கள். ஆனால், அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் தங்கமயில் நேரம் ஆகிவிட்டது என்று தன்னுடைய ஓனரிடம் வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்டார். ஆனால், அவர் முடியாது. வேலை செய்துதான் ஆக வேண்டும் என்று கோபமாக சொன்னார். அப்போது தங்கமயிலுக்கு போன் செய்த கோமதி, வீட்டிற்கு வரவில்லையா? என்று கேட்டார். அதற்கு தங்கமயில் தாமதமாகும் என்று சொன்னார். அதன் பின் சரவணன், நான் உன்னுடைய ஆஃபீஸ்க்கு வெளியே தான் நின்று கொண்டிருக்கிறேன் வருகிறாயா? என்று கேட்டவுடன் தங்கமயில் ஷாக் ஆனார்.

குமார்-அரசி காதல் அறிந்து அதிர்ச்சியடைந்த சரவணன், பாண்டியன் என்ன செய்ய போகிறார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோட்டில் தங்கமயில், தன்னுடைய ஓனரிடம் எப்படியோ கெஞ்சி கேட்டு கிளம்பி விடுகிறார். சரவணன் தங்கமயிலுக்காக அவருடைய ஆபீஸ்க்கு வெளியே காத்துக் கொண்டிருக்கிறார். தங்கமயில் எப்படியோ அந்த இடத்திற்கு வந்து விடுகிறார். பின் இருவருமே வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது பாண்டியன்-கோமதி இருவரும் ஏன் லேட்? என்று கேட்க, மீட்டிங் இருந்தது என்று ஏதோ காரணங்களை சொல்லி தங்கமயில் சமாளிக்கிறார். அப்போது கோமதி, டீச்சர் வேலைக்கு போய் இருக்கலாம். இந்த வேலை வேண்டாம் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

தங்கமயிலின் விருப்பத்தை யாருமே கேட்கவில்லை. மீனா வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது ராஜி- கதிர் இருவரும் வருகிறார்கள். ராஜி கல்யாணத்தில் நடந்த விஷயத்தை எல்லாம் மீனாவிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார். அதற்கு பின் செந்தில் வீட்டிற்கு வருகிறார். அப்போது மீனா, நான் எப்படியாவது பணத்தை ஏற்பாடு செய்து உங்களுக்கு அந்த வேலை கிடைக்குமாறு ரெடி பண்ணுகிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் சொல்கிறார். இன்னொரு பக்கம் அரசிடம் சுகன்யா, நீ ரெடியாகு. குமாருடன் படம் பார்த்துட்டு சாப்பிட போலாம் என்று தேவையில்லாத யோசனை எல்லாம் கொடுக்கிறார்.

https://www.youtube.com/watch?v=eIuXmSAkrM4

சீரியல் ப்ரோமோ:

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் அரசி ஸ்பெஷல் கிளாஸ் இருக்கிறது என்று வீட்டில் பொய் சொல்லி கிளம்புகிறார். அதை பாண்டியன், கோமதி இருவருமே நம்புகிறார்கள். அதற்குப் பின் சுகன்யா, அம்மா வீட்டுக்கு கிளம்புகிறேன் என்று சொல்கிறார் பின் இருவரும் தியேட்டருக்கு செல்கிறார்கள். அங்கு குமார் காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது சுகன்யா, நீங்கள் போய் படம் பார்த்துவிட்டு வாருங்கள் என்று கிளம்பி விடுகிறார். அரசி-குமார் இருவரும் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது சரவணன் அங்கு வருகிறார். இருவரும் போட்டோ எடுத்துக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் சரவணன், கொந்தளித்து குமார் சட்டையை பிடித்து கேள்வி கேட்க, நானும் அரசியும் காதலிக்கிறேன் என்று குமார் சொல்கிறார். இதனால் சரவணன் அதிர்ச்சி ஆகிறார்.

தலைப்புகள்
#pandian stores 2#pandian stores 2 promo#பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 லேட்டஸ்ட்#பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement